பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை





270 எஸ். எம். கமால் "அப்படியே செய்கிறேன் மகாராஜா "கலாதேவியின் பதில், மன்னர் ராணியின் அறையில் இருந்து சென்றார். நின்றுகொண்டிருந்த கலாதேவியைப்பற்றி தமது படுக்கையில் தமது அருகில் அமரச்செய்தார் ராணி. "கலாதேவி! நீயும் ஏன் ஒருமாதிரியாக இருக்கிறாய்?" ராணியார் கேட்டார். "மகாராஜாவும் மகாராணியும் மனநிம்மதியற்று இருக்கும் பொழுது எனக்கு மட்டும் மகிழ்ச்சி எப்படி இருக்கும்" கலாதேவி சொன்னாள். "ஏன் கலா யாரையோ ஒரு வாலிபரை மதுரையில் சந்தித்துப் பேசியதாகச் சொன்னாய் அல்லவா? அவரைப்பற்றி அப்புறம் தகவல் கிடைக்கவில்லையா?" என்று ராணியார் கேட்டதும், "வெறும் வாயை மெல்லும் தங்களுக்கு எனது வாயைப் பிடிங்கி என்னை அழவைக்க வேண்டுமாக்கும். ராணியாருக்கு எப்போதும் கிண்டலதான்." என்று கலாதேவி சற்று வெறுப்போடு பகில் சொன்னாள். "அடி கள்ளி உன்னைத்தவிர வேறு யாரிடம் இவ்வளவு பற்றுதலுடனும், பாசத்துடனும் கேலி செய்வேன்?" என்று சொல்லி கலாதேவியின் முகத்தை தனது முகத்திடன் வைத்தவாறு". ..இதுவும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு என்று தெரியுமாடி ?" என்று கேட்டதும் கலாதேவி சட்டென்று தனது வலது காத்தினால் ராணியாரது வாயைப் பொத்தினார். "ஏன் இப்படி விரக்தியாகப் பேசுகிறீர்கள் மகாராணி தங்கள் மீது உயிரையே வைத்து இருக்கும் மகாராஜா அவர்கள் காதில் பட்டால் எவ்வளவு வேதனைப்படுவார்கள்? இப்படியெல்லாம் பேசாதீர்கள் ராணி" "உண்மைதான். மகாராஜா அவர்கள் என்மீது கொண்டுள்ள உன்னதமான அன்பினாலும் நான் உன் மீது வைத்து உள்ள பாசத்தினாலும்தான் எனது உயிர் நின்று கொண்டு இருக்கிறது." என்று தழுதழுத்த குரலில் ராணி சொன்னதும் கலாதேவி கண்ணிரைக் கொட்டி அழுதேவிட்டாள். கலாதேவியை இறுக அனைத்து ராணியார் சொனனார்,"அழாதே கண்ணு, இனிமேல் இப்படிப் பேசமாட்டேன்." ராணியாரது கண்ணிர் பெருகி வழிவதைக் கண்டதும கலாதேவி விகம்பி அழுவதைக் குறைத்தாள். அன்புள்ளங்களின் இறுக்கமான இந்த நிலை எவ்வளவு நேரம் நீடித்ததோ!