பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 எஸ். எம். கமால் அந்தத் தோப்பின் குடிசைக்குள் மிகவும் சிரமப்பட்டு அகல் விளக்கினை ஏற்றிவிட்டு வந்த தோப்புக் காவலாளியை குடிசை அருகில் கட்டிலில் அமர்ந்து இருந்த பெரியவர் கேட்டார், "வந்தியத்தேவா நமது பிள்ளைகள் இன்னும் வரவில்லைளே?" "வந்துவிடுவார்கள் மகாப்பிரபு" "உனது சமையல் வேலைகளை முடித்துவிட்டாய் அல்லவா?" "ஆமாம் மகாப்பிரபு இன்னும் இரண்டு மூன்று நாழிகை நேரத்தில் நிலா கிளம்பிவிடும் அதற்குள் அவர்கள் வந்துவிடுவார்கள். அப்பொழுது இலை போட்டுவிடலாம்." "அதுசரி. இந்த ஒரு மாதத்தில் அரண்மனையைச் சேர்ந்தவர்கள் வந்து உனக்கு தொந்தரவு கொடுத்தார்களா?" "இல்லை இயா ஒருமுறை இந்த கடற்கரை வழியாக அவர்கள் ரோந்து சென்றதைப் பார்த்தேன். ஆனால் நமது தோப்பிற்குள் அவர்கள் நுழையவில்லை." "சரி சமீப காலத்தில் திருப்புல்லாணிக் கோயிலுக்குச் சென்று வந்தாயா? அங்கு கடக்கும் கட்டுமான வேலைகளைப் பார்த்தாயா?" "ஒரே ஒருமுறை சென்றதை மாத அமாவாசையின் பொழுது சேதுக்கரை சென்று நீராடிவிட்டு திருப்புல்லாணிக் கோயிலுக்கும் சென்று பெருமாளைச் சேவித்து வந்தேன். கோயிலின் உள்ளே தெற்கிலும் வடக்கிலும் புதிதாக மண்டபங்கள் கட்டப்பட்டு இருந்தன. புதிதாக திருமதிலும் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வாசலிலும் கோபுர வேலை நடந்துகொண்டிருந்தது." "அப்படியா. . . .தை அமாவாசைக்கு கூட்டம் அதிகமாக இருந்ததா?" "ஆமாம் பிரபு. முன்பும் சிலதடவைகள் தை அமாவசை நீராடலுக்குச் சென்று இருக்கிறேன். சுமார் ஆயிரம்பேர் வந்து நீராடிச்செல்வார்கள்.