பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 எஸ். எம். கமால் உள்ள சேதுக்கரை மார்க்கமாக நமது தோப்பிற்கு வராமல் கிழக்கே சேதுயாத்திரை சாலையில் சென்று தினைக்குளம் வழியாக இங்கே வந்துகொண்டிருந்தோம் கூப்பிடு தூரத்தில் குதிரை வீரர்கள் சிலர் வந்துகொண்டிருப்பது தெரிந்தது. ஒளிந்து கொள்வதற்கான புதர்களோ செடிகொடிகளோ அங்கு இல்லை. தனுக்காத்த இராமுத் தேவர் ஒரு நல்ல யோசனை ஒன்றைச் சொன்னார்." "என்ன யோசனை அது" பெரியவர் கேட்டார். "அதாவது நமது கிராமப்புரங்களில் நிலத்தின் எல்லை பற்றிய தகராறுகளை தீர்ப்பதற்கு அங்கங்கு எல்லைவிருத்தி என்ற ஒரு பெரிய தனக்காரர் இருப்பார். சம்பந்தப்பட்ட நிலத்திற்குச் செல்லுமுன் அவர் நீராடி சுவாமியைக் கும்பிட்டுவிட்டு, சுவாமிக்கு பலியிட்டு அர்ப்பணம் செய்யப்பட்ட ஆட்டின் தலை ஒன்றை ஒருதட்டில் இடது கையில் ஏந்தியவாறு வலது கையில் அளவுகோள் ஒன்றைப் பிடித்தவாறும் செல்வார். குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு தமது அளவுகோலினால் சம்பந்தப்படட எல்லைகளைக் குறிப்பிட்டுக் காண்பிப்பார். அதாவது, சுவாமியின் பிரதிநிதியாக அவர் அவ்விதம் சொல்வதாக எண்ணி அவர் குறியீடு செய்தபடி எல்லைகள் ஏற்றுக்கொள்ளப்படும்." "அப்படியா எங்கள் பகுதியில் அத்தகைய அலுவலர் இல்லை. சரி அப்புறம்" பெரியவர் கேட்டார். "நாங்கள் நின்றுகொண்டிருந்த புத்த திடலில் உள்ள இயன்கோவிலில் கிடந்த இந்த ஆட்டுத்தலையை கண்டதும்தான் தனுக்காத்த இராமுத் தேவருக்கு இந்த யோசனை ஏற்பட்டது. அங்கு இருந்த விபூதி குங்குமத்தை எடுத்து நெற்றி, மார்பு, கைகளில் பூசிக்கொண்டோம். எங்களது அங்கிகளை தோளில் இருந்து முழங்கால் வரை நன்கு தொங்குமாறு போட்டுக்கொண்டோம். தனுக்காத்த இராமுத்தேவர் முண்டாக கட்டிக்கொண்டு ஒரு கையில் அந்த ஆட்டுத்தலையையும் இன்னொரு கையில் ஒரு சிறிய கழியையும் பிடித்தவாறு நடந்தார். நானும் வீரசிம்மனும் அவரை தொடர்ந்து சென்றோம். அப்பொழுது அந்த வீரர்கள் எங்களை நெருங்கியவுடன் எங்களை விசாரித்தனர். அவர்களுக்கு நான் பதில் சொன்னேன். நாங்கள் தினைக்குளத்தைச் சேர்ந்த குடிகள். எங்களுக்கு சொந்தமான புஞ்சைக்காடு களிமண்குண்டு, இலங்கா