பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 279 குழுமியிருந்த பக்தர்களுக்கு தீபத்தை தரிசிக்குமாறு செய்ததுடன், விபூதி பிரசாதத்தையும் பக்தர்களுக்கு வழங்கினார். அதனை மிகுந்த பயபக்தியுடன் பெற்றுக்கொண்ட கலாதேவி அதனை பத்திரமாக பூக்குடலையில் வைத்துவிட்டு கருவறையை நோக்கி கவாமிக்கு ஒரு கும்பிடுபோட்டுவிட்டு திரும்பியபொழுது அவள் கண்ட காட்சி அவளுக்கு வியப்பூட்டியது. தன்னைப்போல பயபக்தியுடன் சுவாமி தரிசனத்திற்கு இளந்துறவி வந்திருந்தார். அவருடம அவளை கவனித்துவிட்டார். சன்னதியில் இருந்து சற்று நகர்ந்து அம்மன் சன்னதிக்குச் செல்லும் வாசல் அமைந்துள்ள தெற்குப்பகுதியில் நின்றாள். அங்கு இளந்துறவியும் வந்தார். "கவாமி இன்று உங்களுக்கு. என்று சொல்லி முடிப்பதற்குள், "எனக்கு இன்று ஜென்ம நட்சத்திர நாள் அல்ல. மிக முக்கியமான பணியில் இன்று இங்கு வந்தேன். இராமநாதரின் கருணை, நமது சந்திப்பு ஏற்பட்டுள்ளது." "வேறு செய்திகள் உண்டா?" "உனக்குச் சொல்லக்கூடிய செய்தி இல்லை. அடுத்த மூன்று மாதங்கள் எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் மிகவும் நெருக்கடியான காலம். எங்களது வெற்றி தோல்வியை உறுதிப்படுத்தும் சோதனைக் காலம். சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்குமா என்பதுகட திருவருள் நாட்டம்தான். ஏற்கனவே நான் உன்னிடம் கோரியவாறு உனது ஒத்திழைப்பிற்கு நீ ஒருவேளை ஒத்துக்கொள்ளாவிட்டாலும் கூட வாய்ப்பு இருக்குமா என்பது சந்தேகம்தான்." "சுவாமி தாங்கள் எப்படி நினைத்தாலும் சரி. தங்ககளுக்கு எதனையும் செய்யும் மன நிலையில் உள்ளேன். ஆனால், தற்பொழுது மகாராணியாருக்கு ஏற்பட்டுள்ள உடல்நலிவு என்னை மிகவும் பயமுற்துதுவதாக உள்ளது. எப்பொழுதும் அவரது அருகே இருந்து அவருக்கு ஆறுதலாக சிறுஉதவிகள் செய்வதில்தான் எனது