பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்று அவைலகளைக் கொடுத்து துப்பாக்கிகளும் கருமருந்தும் பெற்றுவரவேண்டும். சரிதானே?" பெரியவர் சொன்னதும் அப்படியே மூவரும் ஏற்றுக் கொண்டனர். "அடுத்து நாம் எங்கு சந்திக்கலாம்? வீர நரசிம்மனது வினாவைக் கேட்டு சில நொடிகள் தாமதித்த பெரியவர் "தொண்டிபக்கம் வீரசங்கிலிமடத்திற்கு கிழக்கே உள்ள தனுக்காத்த இராமுத் தேவரது தென்னந்தோப்பில், இன்றிலிருந்து பதினாறாவது நாள் மாலையில்." மெதுவாக கிழக்கு வானில் நிலா தோன்றுவதற்கான வெளிச்சம். அதுவரை கும்மிருட்டு கவிந்து இருந்த கடல்பரப்பில் ஒரு பகுதி பால்போல அந்த வெளிச்சத்தில் காட்சியளித்தது. "சரி. வந்தியத்தேவனைப் போய்க் கூப்பிட்டு வாருங்கள், சாப்பாடு பரிமாறச் செய்யலாம்.' என்று பெரியவர் சொன்னதும் வீரபாண்டியன் தோப்பின் முகப்பு', 'சி 'சன்று வந்தியத்தேவனை அழைத்து வந்தான். "வந்தியத்தேவா! குடிசைக்குள்ளே இலை போடுகிறாயா அல்லது வெளியே இந்த நிலா ஒளியில் அமர்ந்து சாப்பிடலாமா?" "இதோ நிலவு புறப்பட்டுவிட்டது. அதன் வெளிச்சத்தில் இங்கேயே உட்கார்ந்து சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டு குடிசைக்குள் சென்ற வந்தியத்தேவன் இரண்டு போர்வைகளைக் கொண்டுவந்து தரையில் விரித்தான். அடுத்து அதன் நடுவில் சோற்றுப் பாத்திரம், குழும்புச் சட்டி, குடிநீர் மற்றும் தேவையான சிறிய தட்டுகளையும் கொண்டுவந்து வைத்தான். பின்னர் வாழை இலைகளை எடுத்துவந்து அவர் படம் கொடுத்தான் இ எதிரும் புதிருமாக இருவர் இருவராக அமர்ந்து இலைகளை விரித்து வைத்தனர். நிலாச் சோறு படைத்தான் வந்தியத்தேவன்.