பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் rrë = Wy "மிக்க சந்தோஷம். பிரதானியாரே சேதுபதி மன்னருக்கு நடப்பை எடுத்துச் செல்லுங்கள்" பிரதானி சொல்லத் தொடங்கினார். "மகாராஜா கன்னடப்படைகள் நமது சீமைக்குள் வடக்கே தாராபுரத்தை நெருங்கிக் கொண்டு இருப்பதாக நேற்றைய தகவல். அவர்கள் சுமார் முப்பதாயிரம் பேர்கள் இருக்கலாம். முழுவதும் காலாட் படைகள். ஒரு சில தளபதிகளிடம் மட்டும் குதிரைகள் இருப்பதாக தகவல், நமது சமஸ்தானத்தில் முப்பதாயிரம் காலாட்களும் இரண்டாயிரம் குதிரை வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். வண்டியூர் மைதானத்தில் உள்ள அவர்களை தங்களது படைகளுடன் இணைத்து தலைமை தாங்கிச் சென்று வெற்றி பெற வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள். மூன்று நாட்களில் இங்கிருந்து அம்மைநாயக்கனுார் போய்ச் சேரலாம். அதே சமயம் கன்னடப் படைகளும் திண்டுக்கல்லை அடுத்து வந்துவிடும். வழியில் நமது பாளையக்காரர்கள் எல்லா உதவியும் செய்வார்கள். தங்களது துணைக்குச் செல்லுமாறு மகாராஜா அவர்கள் எனக்கு உத்திரவு இட்டு உள்ளார்கள்." "நல்லது. இன்று மாலையிலேயே புறப்படலாம். ஆனால் இவ்வளவு பெரும் படை தேவை இல்லை. தங்களது காலாட் படையில் பத்தாயிரமும், ஆயிரம் குதிரை வீரர்களும் போதுமானவர்கள்." தமது கருத்தைச் சொன்னார் சேதுபதி மன்னர். சேதுபதி மன்னரை ஆசீர்வதித்து திருமலை நாயக்கர் சொன்னார். "தங்களது உசிதம் போல் செய்யுங்கள். தாங்கள் மேற்கொண்டுள்ள இந்த உயர்ந்த பணிக்கு, இந்த மதுாை மண்டலம்