பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 எஸ். எம். கமால் அணிந்த வேட்டி, பெரும்பாலும் நடுத்தரவயதுள்ள ஆடவர்கள் அவர்களில் ஒரிரு பெண்மணிகளும் இருந்தனர். அவர்களும் அதே வயது நிலையுடையவர்கள். வழியில் அவர்கள் திருப்பதியில் தலையை மொட்டை அடித்து இருக்க வேண்டும். சாதாரண நூல் சேலைதான் அணிந்து இருந்தனர். அவர்களது கழுத்து, கைகள், கால்களில் வரிசையாகவும் நெருக்கமாகவும் அணிந்து இருந்து வெள்ளியிலான காப்பு, தண்டை, வளையல் ஆகியவைகளில் அவர்கள் விந்திய மலைத்தொடருக்கு வடக்கே உள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. அவர்களின் கைகளில் காசிநீர் அடைத்த செப்புக்கலசங்களும், பூசைபொருட்களும் கொண்ட பனை ஒலைக் கொட்டான்களும் இருந்தன. இந்த கள்ளங்கபடமில்லாத மக்களுக்குத்தான் இதயத்தில் எவ்வளவு அழுத்தமான, ஆழமான நம்பிக்கை உறைந்து இருக்க வேண்டும். நூற்றுக்கணக்கான மைல் தொலைவை, ஆற்றையும், காட்டையும், மலையையும் கால்நடையாகக் கடந்து வந்து சேதுவையும் இராமநாதரையும் தரிசித்து பிறவிப்பெரும் பயன் பெறவேண்டும் என்ற பேராசை ஆம் மனிதப்பிறவிக்கு ஒரு குறிக்கோள் வேண்டும். அதிலே ஒன்றி உயிர்த்து வாழ்க்கையை ஒம்ப வேண்டும் இல்லாவிட்டால், இதிகாச புராண புருஷனான இராமன் என்ற மனித தெய்வத்தின் மாண்புகளில் மனத்தை முழுமையாகவும் பறிகொடுத்த இந்தப் பாமரமக்கள், இராமபிரானது வாழ்க்கையில் அனுபவித்த இன்பத்தைவிட எத்தனையோ மடங்கு பெரிதான துன்பச்சூழலை இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்பும், எண்ணி நெகிழ்ச்சி யுற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். . . பேரரசர்கள் படையெடுப்பு, புதுப்புது சமயங்கள், அதனைப் பற்றிப்பிடித்த பக்தர்கள். இப்படி எல்லாமே வடக்கிலிருந்து தெற்கு வந்துள்ளன... நீண்ட தொன்மையான தொடர்புகள்.... இப்படியொரு, தொடர்பும் தெளிவும் இல்லாத சிந்தனைகள் தொடர கலாதேவி, வடநாட்டு பக்தர் குழுவைத் தொடர்ந்தவளாக சுவாமி சன்னதியை அடைந்தாள். பூஜை, நைவேத்தியம், தீபாராதனை முடிந்தன. கோயில் பட்டர் தீபத்துடன் கருவறையிலிருந்து முக மண்டபத்திற்கு வந்து அங்கு