பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28O எஸ். எம். கமால் கழிந்து வருகிறது. வேறு எதைப்பற்றியும் என்னால் கவலைகொள்ள முடியவில்லை..." "சரி. எல்லாம் திருவருள் நாட்டம்." "அ ப்பொழுது நான் விடைபெற்றுக்கொள்ளவா? அடுத்து எங்கே... தகவல் அனுப்புகிறீர்களா.." "சரி' அவ்வளவுதான் மின் வெட்டுப்போல அந்த பக்தர்கள் கூட்டத்தில் இருந்து மறைந்துவிட்டார் இளந்துறவி. ஏதோ ஒருவிதமான ஏமாற்றம், திகைப்பு கலாதேவிக்கு. அரண்மனைக்குச் சென்று சுவாமி புரசாதத்துடன் மகாராணியாரை சந்தித்தபொழுது கலர்தேவியின் முகத்தில் படிந்துள்ள இந்த உணர்ச்சிப் படிவத்தை நன்கு புரிந்துகொண்ட ராணியார், "என்ன கலா, ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? கோவிலில் IT ஏதாவது . . . "ஒன்றுமில்லை மகாராணி எனது இதயத்தில் தாங்கமுடியாத பாரம் ஏறிவிட்டது. அதனைக் குறைப்பதற்காகத் தான் சுவாமியின் சன்னதிக்குச் சென்றேன். தெய்வம் நின்றுதான் கேட்கும்போலத் தோன்றுகிறது." "ஆகா என்ன அருமையான தத்துவம். நமக்கு இன்பமும் துன்பமும் ஏற்படுவதற்கு நாம்தான் காரணம். அதனை உணராமல் கோவிலுக்குச் சென்றுவிட்டால் மட்டும் நிலைமை மாறிவிடுமா? நாம் செல்லும் இடமெல்லாம் நமது நிழல் தொடர்ந்து கொண்டுதானே இருக்கும்? என்னையே எடுத்துக் கொள். எனக்கு வாழ்க்கையில் என்ன குறை? எனக்கு ஏன் இவ்வளவு மோசமான உடல் நலிவு. இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் மகாராஜா அவர்களது திருப்புல்லாணி திருக்கோயியயில் திருப்பணி நிறைவை காண்பதற்கு நான் இருப்பேனா என்பதே எனக்குச் சந்தேகமாக உள்ளது...." மகாராணியார் சொல்லி முடிப்பதற்குள் அவரது வாயை பொங்ததிய கலாதேவி "இப்படியெல்லாம் ஏன் சொல்லுகிறீர்கள்?"