பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 281 என்று கண்ணிர் தளும்ப கடிந்து கேட்டாள். "பயப்படாதே கலா மரணம் என்பது அனத்து உயிர்களுக்கும் நியதி. அதைக் கண்டு அஞ்சுவது அறிவுடைமையாகாது. எலுது கணவரைப் பற்றி நான் கொண்ட கவலை பயமாகி, பீதியாகப் பரிணமித்து இன்று இந்த நிலைக்கு ஆளாக்கப்பங்டடுள்ளேன். இந்த தொடர்ச்சியில் எனக்கு மரணம் அமையலாம். அல்லது அடுத்தும் சம்பவிக்கலாம். இதனை எவ்விதம் எதிர் கொள்வது என்பதிதான் நாம் சிந்திக்கவேண்டியது. கடந்த இருபது ஆண்டுகாலத்தில் எனது அன்புக் கணவராக, ஆதரிக்கும் தெய்வமாக, விளங்கி வரும் மகாராஜாவைப்பற்றிய சிந்தனையே என்க்குப் பெரும் சுமையாக உள்ளது. தெரிகிறதா?" கலாதேவி வேதனை மிகுந்தவளாக, மெளனமாக மகாராணியை நோக்கியவாறு அவரது கட்டிலில் அமர்ந்து இருந்தாள். II = == F. is: == o, I கலா எனக்காக நீ எதுவும் செய்வாய் அல்லவா? "சொல்லுங்கள் என்ன செய்ய வேண்டும்? மகாராணி தங்களது நலனுக்காக இந்த எளியவளின் உயிரை இப்பொழுதே கொடுப்பதற்கும் சித்தமாக இருக்கிறேன்." வேதனையையும் ஆர்வத்தையும் வெடளிப்படுத்தும் கலாதேவியின் வார்த்தைள். "உன்னை நன்றாக அறிந்தவள் நான் எனக்காக நீ உயிரை விட வேண்டியதில்லை. உயிருடன் வாழ்ந்தால் போதும். நீ சொல்வதை சத்திய வாக்காக ஏற்றுக்கொள்கிறேன்... அப்பா எனது மனச்சுமையில் ஒருபகுதி குறைந்துவிட்டது" "மகாராணி அரண்மனை பாதசேவையே பரமபதம் என்று நம்பிய அனுமன் இதே தலத்தில் பூஜை செய்வதற்கு தொலை துாரத்து காசியில் இருந்து ஆத்ம லிங்கத்தை உடனே கொண்டுவரவேண்டும் என பணித்ததும் விசுவரூபம் பெற்று பறந்துசென்று அந்தலிங்கத்தை செகாண்டுவந்தான் அல்லவா? அதைபோல சேது.கங்கை நாச்சியாரின் அளவிடற்கரிய அன்புக்காக இந்த அடியவள் எதையும், எப்பொழுதும், செய்வாள். தாராளமாக எனது பேச்சை தத்யபிரமானமாகக் கொள்ளலாம்."