பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 285 தொடர்ந்து ஒலித்த பறைகளது முழக்கம் எருது கட்டுவிழா தொடக்கம் பெற போவதைத் தெரிவித்தன. அந்த ஒலியைக் கேட்ட சில காளைகள் மிரண்டு தலையை ஆட்டின. அவைகளை அடக்கிப் பிடிக்கப் போகிறோம் என்ற உற்சாகத்தில் இளைஞர்கள் தங்கள் கச்சைகளை சரிசெய்துகொண்டு அந்தக் காளைகளைப் பாய்ந்து துரத்த தயாராகினர். சேதுபதி மன்னர் ஒரு மாட்டின் கயிற்றை மரியாதையின் நிமித்தம் வாங்கி அந்த மாட்டை கயிற்றினின்றும் விடுவித்து சிட்டினார். அந்த மாடு மிரண்டு ஒட அதைத் துரத்திக்கொண்டு அதன் பின்னே தொடர்ந்து இளைஞர் சிலர் ஒடினர். இரண்டொரு இடங்களில் நின்று நிமிர்ந்துபார்த்து தன்னைத் தொடர்ந்து வந்த இளைஞர்களைக் கொம்பினால் குத்தித் தள்ள முயன்றது. அதில் ஒருவர் அதன் வாலைப்பற்றி அதன் ஒட்டத்தை நிறுத்த முயன்றார். அவரைச் சீறிப் பாய்ந்ததோடு, அந்த மாடு திரும்பியபொழுதுவேறு இரண்டு இளைஞர்கள் அதன் கொம்புகளைப் பற்றிப்பிடித்து நிறுத்தி மாட்டின் கழுத்தில் பிணைத்து இருந்த பரிசுத் துண்டைப் (மஞ்சியை) பறிப்பதற்கு முயன்றனர். அந்த மாடு தனது மான உணர்வு மிக்கதாக தனது பலத்தையெல்லாம் சேமித்து பயங்கரமாக மூச்சுவிட்டு கொம்பை பற்றிய இளைஞர்களைத் தனது கொம்பை ஆட்டி முட்டி எறிந்தது. சற்று தூரத்தில் பொத்தென்று விழுந்த அவனைத் துரக்க திரளான மக்கள் அங்கே சென்றபொழுது, அந்த மாடு வெகுண்டு அங்கிருந்து வயல்பக்கம் ஓடியது. அடுத்தடுத்து இந்து மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. அந்தக் காளைகளிடம் அந்த இளைஞர்களின் முயற்சி எடுபடவில்லை. மாறாக காளைகளே காளையர்களை வெற்றிகொண்டு அவர்களில் பலரது உடம்பைக் கொம்புகளினால் பதம்பார்த்துவிட்டன. கன்னியரும் மட்டுமல்லாமல் சேதுபதி மன்னருக்கும் கூட ஏமாற்றம்தான். போரில் தங்களது உயிரைத் திரணமாகக் கருதி அகர பலங்கொண்டு தாக்கும் எதிரிகளை போரில் மடக்கி முடக்கி சின்னாபின்னப்படுத்தும் மறவர்களில் ஒருவருக்குக் கூட மாட்டைப் பிடித்து நிறுத்தும் மன வலிமை இல்லையா? திடீரென ஒரு இளைஞன் ஒடி வந்தான் அவனது மார்பிலும் கன்னத்திலும் மாட்டின் கொம்புபட்ட காயத்திலிருந்து இரத்தம் வடிந்துகொண்டு