பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 எஸ். எம். கமால் "மகாராஜா மாட்டைப் பிடித்து அடக்கிவிட்டேன். இதோ மஞ்சி" என்று சொல்லியவாறு கையில் இருந்த மஞ்சியை மன்னரது காலடியில் வைத்து நின்றான் அந்த இளைஞன். "சபாஷ் உனது வீரத்தைப் பாராட்டுகிறேன். இதோ பரிசு" என்று சொல்லிய மன்னர் தான் அணிந்து இருந்த தங்கமாலை ஒன்றைக் கழட்டி அந்த இளைஞனுக்கு சூட்டினார். கூடிநின்ற குடிமக்கள் ஆரவாரம் செய்தனர். இளைஞர் மன்னரிடம் விடை பெற்று தனது காயங்களுக்கு கட்டுப்போட குடிமக்கனைத் தேடி அங்கிருந்து சென்றான். மன்னரும் தமது பரிவாரங்களுடன் வடக்குத் திசையில் நயினார் கோவிலுக்குப் புறப்பட்டார். அன்று இரவு மிகவும் தாமதமாக மன்னரும் பரிவாரங்களும் நயினார்கோவில் கிராமத்தைச் சென்று அடைந்தனர். அர்த்த சாம பூஜையில் கலந்துகொண்டபின்னர், கோயிலின் வடக்குப் பகுதியில் தெப்பக்குளத்தை பார்த்தவாறு இருந்த விடுதியில், மன்னர் தங்கினார். இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு விடுதியின் மூலையில் உள்ள விசாலமான அறையில் கட்டிலில் அமர்ந்து இருந்தார். ஊர் முழுவதும் அமைதி நிலவியது. அவருக்கு உறக்கம் கொள்ளவில்லை. அங்கே தொங்கவிடப்பட்டிருந்த லஸ்தர் விளக்கின் மென்மையான ஒளிக்கற்றையில் இனந் தெரியாத சில உருவங்கள் தலைகாட்டியது போலத் தோன்றின. அடுத்து அவை கருமையான உருவங்களாக நிழலாடின. 輯 種 ■ 轟 種 இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்னர், நயினார்கோயிலில் நடைபெற்ற திருவிழாவைக் காண்பதற்காக இளைஞன் திருமலை அவனது தாயைப்பெற்ற பாட்டனார் தரப்புலி தேவர் வீட்டிற்கு வந்து இருந்தான். அன்று பத்தாம் நாள் திருவிழா. கவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் நகர்வலம் வந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னால் நாதசுரக்கோஷ்டி, சதிர் கச்சேரிக்கலைஞர்கள் நடந்துபோய்க்கொண்டிருநத்னர் பூர்ணச்சந்திரனும் இவர்களைப்