பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 287 பார்த்தவாறு தொடர்ந்து போய்க் கொண்டிருந்தான். நாதஸ்வர இசையைக் கேட்டு மகிழ்ந்தவாறு அந்த பவனியில் சென்ற திருமலை கோயிலை அடைந்தவுடன் அங்கு நடைபெற்ற சதிர்க் கச்சேரியையும் ஆர்வத்துடன் கண்டுகளித்தான். சதிராடிய இரு பெண்களது அணிமணிகள், ஒப்பனை ஆகியவைகளை உற்று நோக்கிக்கொண்டிருந்த இளைஞன் திருமலைக்கு நட்டுவனாரின் சிங்கி இசையுடன் இணைந்து அவர்கள் அபிநயங்கள் பொம்மலாட்டக்காட்சிப் பொம்மைகள் போல அசைந்து கண்களும், கைவிரல்களும், கால்களும், தலையும் வெளிப்படுத்தும் பாவங்கள் பாட்டின் பொருள் ஆகிய அனைத்தும் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டன. திருவிழா முடிந்து இரண்டு நாட்கள் தங்கி இருந்த அந்த நடனக் குழுவினரைச் சந்தித்து அவர்களது நடனக்கலை பற்றிய பல செய்திகளைத் தெரிந்துகொண்ட பொழுது அவனது வியப்பு இன்னும் மிகுதியாகி விட்டது. சேதிபதி மன்னரது உறவினர் அந்த இளைஞன் என்று அறிந்த அந்த நடனக்குழுவினர் இளைஞனிடம் அன்பாகவும் ஒளிவு மறைவு இல்லமலும் பரதக்கலை பற்றிய நெளிவு களிவுகளையெல்லாம் விளக்கமாக எடுத்துக் கூறினர். மடையிலிருந்து தடையில்லாமல் பாயும் பெருவெள்ளம் போல ஆசைகளும் ஆர்வமும் தளும்புவது இளைஞரது இதயமல்லவா? வெம்மையில்லாமல் கொழுந்து விட்டெறியும் அந்த உலைக் களத்தில் எத்தனையோ உருவங்கள். குயவனாரது திகிரியில் வனையும் பலவித சட்டி பானைகளைப் போன்று இளைஞன் திருமாலையும் ஒரு சரியான பாத்திரத்தை தேர்வு செய்து கொண்டான். அதுான் நடனக் கலையை முழுவதுமாகக் கற்றுத் தேர்வது என்ற பேராசை பேரனது இந்தப் புதுவித ஆசையை அறிந்த பாட்டனாருக்கு சிரிப்புத்தான் வந்தது. படைக்கலம் தாங்கி நாடுகாக்க வேண்டிய இளைஞன் சதிர்க் கச்சேரி செய்வதா? மறவசீமை மண்ணிலே முளைக்காத வித்து எதற்கும் அவனது பெற்றோர்களது ஒப்புதல் பெற்றுக்கொள்ளும்ாறு பாட்டனார் அறிவுரை கூறினார். திருவிழா முடிந்ததும் இளைஞன் சொந்த ஊரான முத்துவயலுக்குச் செல்வதாகப் பாட்டனாரிடமிருந்து விடைபெற்றான். ஆனால் அவன் தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தான்.