பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 எஸ். எம். கமால் கீழவாசல் பகுதியில் இருந்த அந்த நடனக் குழுவினரது வீட்டைக் கண்டுபிடித்து அவர்களைச் சந்தித்தான். அவர்களுடன் ஒருவாரம் தங்கி இருந்து அவர்களுக்கு நடனம் கற்றுத் தந்த நட்டுவனார் - ஆசான் திருப்பதி நாராயண மூர்த்திக்கு ஒலை எழுதி வாங்கிக்கொண்டு திருப்பதிசெல்ல வேண்டிய வழிவிவரங்களை தெரிந்துகொண்டு தஞ்சாவூரில் இருந்து செஞ்சிக்கோட்டை செல்லும் அஞ்சல்காரர்களுடன் முதலில் செஞ்சி போய்ச் சேர்ந்தான். அடுத்து, அங்கிருந்து திருப்பதி செல்லும் யாத்திரைக் கோஷ்டியுடன் திருப்பதி போய்ச் சேர்ந்தான். ஆசான் நாராயணமூர்த்தியைச் சந்தித்து தஞ்சாவூரில் பெற்ற ஒலையை ஒப்படைத்தான். இளைஞனது ஆசையை அறிந்த அவர் முதலில் ஆச்சரியப்பட்டார். காரணம், அன்றைய நிலையில் ஆண்கள் முறையாக நடனக்கலையைப் பயில்வது கிடையாது. நடனத்தின் பொழுது கொன்னக் கோல் அடிப்பதற்கு மட்டும் ஆண்கள் கற்று வந்தனர். என்றாலும், இளைஞன் திருமலையின் ஆர்வத்தாலும் அவனது உடல்கட்டிலும், திருப்திய டைந்த ஆசான் அவனுக்கு நடனத்தை முறையாகப் பயிற்றுவிக்கத் தொடங்கினார். இயற்கையின் எழில்கோலமாக விளங்கும் ஏழுமலைக்கிடையில் அமைந்தது திருமலை, அதைக் காட்டுவதுபோல வானை நோக்கி எழுந்து நிற்கும் வேங்கடப் பெருமாளின் விண்ணகரம். காலைப் பரிதியின் பொன்னிற கிரணங்களுடன் போட்டியிடும் கிருட்டின தேவராயர் பொன்வேய்ந்த கோபுரம், புனிதமும் அழகும் தவழும் அந்த அமைதியான அழகுச் சூழலில், திருக்கோயிலின் தென்பகுதியில் உள்ள இராமானுஜ கூடத்தை ஒட்டிய திருவிழா மண்டபம் ஒன்றில்தான் நாராயணமூர்த்திகாருவின் நடனப் பள்ளி, காலையிலும் மாலையிலும் ஆசானது போதனையையும் பயிற்சி யையும் பெற்ற நேரம் போக எஞ்சிய நேரத்தை திருப்பதிவேங்கடவனின் ஆலயத்தில் கழித்தான் இளைஞன் திருமலை முழுமையாகக் கோவிலைப் பற்றியும் அங்கு நடைபெற்றுள்ள திருப்பணிகளையும் மிகுந்த அக்கரையுடன் விசாரித்து அறிந்து வந்தான். திருக்கோயிலின் கிழக்குவாசலில் நுழைந்தவுடன் தமது இரு பத்தினிகளுடன் காட்சிதரும் விறுயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரது செப்புத் திருமேனிகள், அடுத்து மகாமண்டபம் திருப்புல்லாணிதாசர் என்ற சேதுநாட்டு தேசாந்திரி திருப்பணி செய்த மகாமண்டபம். . . . .ஆம்! பதினான்காம் நூற்றாண்டில் சேது நாட்டுக் குடிமகன் இருவருக்கு இத்தகைய