பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 280 இதிசொதிந்ெதEபெற்றது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. தமிழக தென் எல்லையின் கிழக்குக் கடற்கரையின் திருப்புல்லாணியை வட வேங்கடத்துடன் இணைத்த அந்த மகானுபாவனை எப்பw வாழ்த்துவது? அவர் மன்னரோ பெருநிலக்கிழாரோ அல்ல. ரு, சாதாரண தேசாந்திரி... இதனை நினைக்கும் பொழுது இளைஞன் திருமலையின் உள்ளத்தில் தாங்கமுடியாத ஒரு இன்பத் தவிப்பு. ஒவ்வொரு முறையும் அந்த திருக்கோயில் மகாமண்டபத்தில் துழையும்பொழுது எல்லாம் இளைஞன் திருமலையின் உள்ளத்தில் அந்த தேசாந்திரி பற்றிய சிந்தனையே முதலில் எழும். அடுத்து அங்கு ஒலிக்கப்பெறும் குலசேகர ஆழ்வாரது பாடல்களும் இளைஞன் திருமலையின் நிர்மலமான இதயத்தில் ஆழமான உணர்வுகளை உசுப்பிவிடும். வேங்கடத்து வாழும் கழுகாக, கனையாக, செண்பகச் செடியாக, கானாறாக, கோயில்படிக்கல்லாய், ஏதேனும் ஒன்றாக இங்கு ஆகமாட்டோமா என அலமருந்து பாடிய அந்த ஆழ்வாருக்கு கிடைக்காத பேரு தனக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்வான். இவ்விதம் ஆண்டுகள் மூன்று ஆகிவிட்டன. பரதக்கலையிலும் தேர்ச்சிபெற்று பரதநாடகப் பிரவீணா என்ற பட்டமும் பெற்றாகிவிட்டது. ஆச்சாரியாவின் திருவடிகளை போற்றி வணங்கி அவரது ஆசியும் பெற்று தாயகமும் திரும்பிவிட்டான்....அடுத்து சேதுபதி பட்டமும் கிடைத்தது. . . . இப்பொழுது இளைஞன் திருமலையின் அதிகாரப்பூர்வமான பெயர் சுப்ரமணிய திருமலை ரகுநாத சேதுபதி காத்த தேவர். இவையனைத்தும் நிழற்படமாக மன்னர் திருமலையின் நெஞ்சத்தில் சில நொடிகள் விரிந்து கருங்கின. இந்த அரச பதவியில் எத்தனையோ அறச்செயல்களை, சாதனைகளை முனைந்து முடித்தாகிவிட்டது. இப்பொழுது திருப்புல்லாணி பெருமாள்கோவில் திருப்பணியையும் நிறைவு செய்துவிட்டால். . . . ஆகா! எத்தனை இனிய அரிய ஆசை வான் ஆளும் செல்வமும் வேண்டாம். மண் அரசும் வேண்டாம், ஆம் வேண்டாம் இந்த நினைப்பில் மன்னர் கண்ணயர்ந்து உறங்கினார். இத்தகைய அயர்ந்த நிலையில் ஏற்படும் உறக்கத்தில் தான் உலக சாதனைகள் சிறிய கனவுகளாக கருக்கொள்கின்றன. 鬱鬱鬱