பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 291 அணியினை இனந்தெரிந்து கொண்டவர்கள் போல் வேட் ைக் காவலாளிகள் கோட்டையின் உயரமான கனத்த கதவுகளில் ஒன்றை மிகவும் சிரமப்பட்டு திறந்து அந்த அணியினை கோட் ைக்குள் வருவதற்கு அனுமதித்தனர். அந்தக்குழு கோட்டைவாசலின் உட்பகுதியில் இருந்த கோட்டைத் தளபதியின் அலுவலகத்தருகே போய் நின்றது. குதிரையில் இருந்து முதலில் இறங்கிய இருவர் மட்டும் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அணிந்து இருந்த மேலாடைகளைக் களைந்து பிறகு ஏற்கனவே அணிந்திருந்த அங்கிகளில் அவர்களைப் பார்த்தபொழுதுதான் அவர்கள் சேதுபதி மன்னரும் பிரதானியும் எனத் தெரிந்தது. இரவு நகர்வலம் சென்று வந்த பிறகு மாறுவேட உடைகளைத்தான் இவ்விதம் கழற்றிஅங்கு வைத்தனர். ஆனால் அவர்கள் முகத்தில் ஒட்டிவைத்த தாடி மட்டும் அப்படியே இருந்தது. அப்பொழுது அங்கு வந்து பணிந்த கோட்டைத் தளபதியுடன் அவர்கள் மெதுவாகப் பேசினார்கள். அவர் உடனே அறைக்கு வெளியே சென்று நான்கு வீரர்களை திவெட்டி சுளுந்துகளுடன் அழைத்துவந்தார். பின்னர் அரசரும் பிரதானியும் கோட்டைத் தளபதியும் அந்த தீவெட்டிகளைத் தொடர்ந்து தென்பக்கமிருந்த சிறைச்சாலைக்கு சென்றனர். கோடங்கி நாயக்கர் அடைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றனர். கோடங்கி நாயக்கர் "ஜக்கம்மா ஜக்கம்மா!" என்று ஜெபித்துக்கொண்டிருந்தார். "என்ன கோடங்கி நாயக்கரே இன்னும் உனது பாராயணம் முடியவில்லையே புறப்படலாமா?" "எங்கே போகவேண்டும்?" "என்ன தளபதியாரே இவருக்கு தகவல் கொடுக்கவில்லையா? என பிரதானி தளபதியிடம் கேட்டார். "எல்லா விபரமும் காலையிலேயே அவருக்கு தெரிவித்தவிட்டேன்"