பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 எஸ். எம். கமால் "தளபதி சொன்னதைக் கேட்டீரா? இன்று என்ன நாள்" மீண்டும் கோடங்கி நாயக்கரிடம் கேட்டார். "ஜக்கம்மா இன்று அமாவாசைநாள்" "இன்று இங்குள்ள ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு உம்மை பலியிடப் போகிறோம். உமக்கு இதுவரை போதுமான அவகாசம் கொடுத்தும் நீர் உண்மையைச் சொல்லி தப்பித்துக்கொள்ள உமக்கு விருப்பமில்லை. ஆதலால் நீர் பகைவனது உளவாளி என முடிவு செய்து அதற்கான மரணதண்டனையை நிறைவேற்ற இருக்கிறோம். விரைவாக தளபதி கொடுத்த மஞ்சள் நனைத்த வேட்டியை அணிந்து கொண்டு எங்களுடன் அம்மன் கோவிலுக்குப் பு றப்படும்." பிரதானி சொல்வதைக் கேட்ட கோடங்கி நாயக்கரது முகத்தைக் கூர்மையாக கவனித்தார் சேதுபதி மன்னர். "ஜக்கம்மா எனது இலட்சியம் நிறைவேறாமல் குற்றவ ாளியாக நான் சாக வேண்டுமா? எனக்கு இப்படியொரு இழிவான சாவா? எங்களது வீரப்பரம்பரையின் இரத்தம் வீணாகச் சிந்த வேண்டுமா? சொல்தாயே... சொல்" கோடங்கி நாயக்கர் சில நிமிடங்கள் மெளனமாக ஜக்கமாளின் உத்தரவை எதிபார்ப்பவர்போல் நின்றார். அவரது மெளனம் எப்பொழுது முடியும்? "உம் இவருக்கு மஞ்சள் வேட்டியை அணிவித்து கையில் விலங்கு போடுங்கள்" பிரதானி சற்று கடுமையாகச் சொன்னார். "பொறுங்கள். ஜக்கம்மாள் சொல்லிவிட்டாள். எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை வேறொருவருக்கு கொடுத்து விட்டாளாம். அதுவும் சரிதான். நான் ஊர் திரும்ப உத்தரவாகிவிட்டது. நான் ஊர் திரும்பலாமா?" I * o 'ஜக்கம்மா. is so is | "என்ன சொல்கிறீ jo" | "சொல்லிவிடுகிறேன். ஜக்கம்மா..." பிரதானி அங்கிருந்த சிறைச்சாலை பணியாளர்களை சைகை செய்ததும் அவர்கள் அங்கிருந்து அகன்றுவிட்டனர்.