பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 293 இப்பொழுது கோடங்கி நாயக்கர் முன்னால் பிரதாவிய ன் கோட்டைத் தளபதியும் சேதுபதி மன்னர் மட்டும் ன்ெறு கொண்டிருந்தனர். துரணில் பிணைக்கப்பட்டிருந்த தீவெட்டிகள் அப்பொழுது திடீரென வேகமாக வீசிய காற்றை எதிர்த்து சட என்ற ஒசையுடன் பிரகாசமாக எரிந்தன. "உம்...." மீண்டும் பிரதானியின் குரல். II --- # II o s - al o - ஜக்கம்மா! கோடங்கி நாயககர தனது வாக்குமூலத்தைச் சொல்ல முயன்றார். "எங்களது பாரம்பரிய பெருமைக்கு ஏற்பட்ட களங்கத்தை எப்படி தீர்ப்பது என யோசித்தேன். ஏற்கனவே சொன்னேன் அல்லவா? விஜயநகர சக்கரவர்த்தி சம்புராயர் அனுமதித்த சோமனது தலை உருவத்தைக் கொண்ட பொன்னால் ஆன வெண்டயத்தை எங்களது எட்டயபுரம் மகாராஜாக்கள் அணிந்துவந்த அதே வெண்டயத்தின் தலையை மாற்றி அதில் எங்களது ஜகதல பிரதாப எட்டப்பனது தலை உருவத்தைப் பொறித்து சேதுபதி ராஜா இடதுகாலில் அணிந்து வருகிறார். எங்களது ஆயிரம் வருஷத்து எட்டப்பரது வீரப்பரம்பரையை மான பங்கப்படுத்திய செயல். மனிதன் வாழ்வை மானத்தைப் பேணுவதற்காக மானம் அழியும் அவலநிலை ஏற்பட்டால்.... "இதற்கு என்ன பரிகாரம் என்று ஜக்கம்மாவிடம் கேட்டேன். இதற்காக விரதம் இருந்தேன். மூன்றாவது நாள் இரவு கனவில் ஜக்கம்மா எனக்கு குங்குமம் கொடுத்தாள். விபூதிக்குப் பதிலாக கும்குமப்பிரசாதம். இரத்த நிறம் பிரதிபலிப்பது. பரம்பரை கெளரவத்தை நிலைநாட்ட பலிவாங்கு என்பது அவளது உத்தரவு. அதுவும் குங்குமம் இரத்தம் ஆஹாஹா ஒரு சிரிப்பு - அவளது க:டட்டளையை நிறைவேற்ற மூன்று வருடமாக முயன்று வருகிறேன். தாடிக்கொம்பு நடன நிகழ்ச்சிக்கு பிறகு விட்டெரிந்த கட்டாரி என்னுடையது. இருட்டில் குறிதவறிவிட்டது. வேறு யாரும் அங்கு வந்து எறிந்துவிட்டு ஒடவில்லை. நான் அங்கேதான் "அது எப்படி சாத்தியமாயிற்று" பிரதானி கேள்வி கேட்டார்.