பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 எஸ். எம். கமால் "சேது நாட்டு வீரனைடப போல உடைதரித்து அவர்களில் ஒருவனாக இருந்தேன். அவர்களில் சிலரிடம் மூன்று கட்டாரிகளை தனித்தனியாக வாங்கி இருந்தேன்." "அப்புறம்...." பிரதானி தொடர்ந்தார். "இரண்டாவது முறையாக சென்ற விஜயதசமி விழாவின் பொழுது எனது அஜாக்கிரதையால் எனது திட்டத்தை நிறைவேற்ற இயலாமல் போய்விட்டது." "அன்றைக்கு முதல்நாள் இரவு ஜக்கம்மாவிற்கு படையலிட்டிருந்த சாராயம் இருந்த குவளையை எடுத்து தண்ணிர் என நினைத்துக் குடித்துவிட்டேன். அதனால் ஏற்பட்ட லேசான போதையினால் திட்டம் பாழாகிவிட்டது. தங்களது கோட்டைக் கவலாலிகளின் எச்சரிக்கையினால் மூன்றாவது முறையும் எனது திட்டம் நிறைவேற்றப்பட முடியவில்லை." என்று வருத்தத்துடன் சொல்லி முடித்தார் கோடங்கி நாயக்கர். "உமது திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வேறு யாரும் இருக்கிறார்களா?" "இல்லை. இந்தத் திட்டம் என்னுடையது. இது வேறு யாருக்கும் தெரியாது. வேறு யாரையும் இதில் பங்குகொள்ள விரும்பவில்லை. நான் வேறுயாரையும் சேர்த்துக்கொள்ளவில்லை." "ஆமாம். நீர் எட்டையாபுரம் சமஸ்தானத்தை சேர்ந்தவர் | தானே! "ஆம், தற்பொழுதுய எட்டையாபுரம் சமஸ்தானாதிபதி கெச்சிலப்ப நாயக்கருக்கு உறவினன் தான்." "சமஸ்தானதிபதியான அவருக்கே அவரது குடும்ப கெளரவத்தைப் பற்றி அக்கரை கொள்ளாதபொழுது நீங்கள் மட்டும் ஏன் இவ்விதமான தீவிர நடவடிக்கையில் ஏன் முனைந்தீர்?" "மனிதன் என்றால் அவனது ஆறறிவில் மான உணர்வும் மறைந்து இருக்க வேண்டும். சமயம் ஏற்படும்போது அது துலக்கமாக ஏற்பட வேண்டும். அந்த உணர்வு இருந்தால் ஒழிய, அவன் தனது குடும்பத்தையும் நாட்டையும் காப்பற்றும் நல்ல மனிதனாக விளங்க முடியாது. இப்பொழுதுள்ள எட்டையபுரம் சமஸ்தானதிபதி மதுரை திருமலை நாயக்கரது தண்டனைக்கு ஆளாகி பல சிரமங்களை