பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 295 அனுபவித்தவர். தங்கள் மன்னரது போர் நடவடிக்கையில் கைதாகி திருமலை நாயக்கர் இயன் முன் நிறுத்தப்பட்டு, மன்னிப்புப் பெற்று மீண்டும் சமஸ்தானாதிபதியானவர். தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். அதற்கு விலையாக தனது பாரம்பரியம், எத்தனையேர் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்த எட்டப்பன் என்ற பெருமையின் சின்னமான இந்த இடைக்கால சின்னத்தை, இழந்துவிட்டார். அதைப்பற்றி அவர் பெரிதாக வருத்தப்பட வில்லை. அவர் அப்படி இருக்கிறார். என்பதற்காக அந்தப் பரம்பரையைச் சேர்ந்த நான் கைகட்டிக் கொண்டு சும்மா இருக்கமுடியாது அல்லவா? பாரதக் கதை நமக்கெல்லாம் தெரிந்ததுதான். தருமர் மிகப் பெரிய அறிவாளி. சகல சங்கதிகளையும் கற்று அறிந்தமேதை. சூதாட்டத்திலே வீட்டையும் நாட்டையும் மட்டுமல்லாமல் மனைவி பாஞ்சாலியையும் இழந்து அவளதுமானபங்கத்திற்கும் வழிவகுத்துவிட்டார். தருமரது செயல் தமது குடும்பத் தலைவரது செயல்தானே என்று அவர்களது தம்பிமார்கள் கம்மா இருந்துவிடவில்லை. அவர்கள் ஏற்ற வீரசபதம் பாரதப்போராகப் பரிணமித்தது. அதுபோல எட்டையபுரம் சமஸ்தானாதிபதி செயல்படவில்லை. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நான் செயல்பட்டேன். அது எனது கடமை. அவ்வளவுதான்." மன்னரது சைகையைப் புரிந்துகொண்ட பிரதானி அவரது விசாரனையை அமலும் தொடராமல் அத்துடன் முடித்துவிட்டார். "கோடங்கி நாயக்கரே நன்றாகத் தூங்குங்கள்"என்று சொன்ன பிரதானியும் கோட்டைத் தளபதியும் சேதுபதி மன்னரைப் பின்தொடர்ந்தனர். சிறைக் காவலர் வழக்கம்போல பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மரியாதைக்காக அரண்மனை அந்தப்புரம் வரை மன்னருடன் சென்றுவிட்டு பிரதானியும் கோட்டைத் தளபதியும் கோட்டைவாசல் பகுதிக்குத் திரும்பினர். அமாவாசை இரவின் இருள் கோட்டைவளாகம் முழுவதையும் அனைத்துவைத்து இருப்பதுபோல கவிந்து இருந்தது. ஆனால், சேதுபதி மன்னரது சிந்தனையெல்லம் பற்றிப் படர்ந்திருந்த குழப்பமான இருள் விலகத் தொடங்கியது. శ్రీ శ్రీ శ్లో