பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 297 சத்திரங்களில் இரண்டு வேளை உணவும், இலவசமாக அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அவைகளில் ஒன்றுதான் இந்த வீரசங்கிலி மடம். தொண்டிபட்டினத்திற்கு தெற்கே இந்தாவது கல் தொலைவில் அமைந்திருந்தது. இந்த மடத்திற்கு கிழக்கே கடற்கரை. அதனை யொட்டி பசுமை கொழிக்கும் தென்னந்தோப்பு வழக்கத்திற்கு மாறாக அங்கு மனித நடமாட்டம் தென்பட்டது. மாலை நேரம் ஆனதும் அன்று ஏற்கனவே மடத்தில் தங்கியிருந்த ஏழெட்டுப் பேரும் அந்த தோப்பிற்குள் சென்றனர். நிலாப்பெண் நீரில் மூழ்கி நிமிர்ந்து எழுவது போல் சிறிது நேரத்தில் கிழக்குக் கடற்கரையில் அமுதக் கதிர்களைப் பரப்பி பவனிவரத் தொடங்கியது முழு நிலவு. அப்பொழுது தெற்கே இருந்து அடுத்த தோப்பிற்கு அருகே நங்கூரமிட்டு நின்ற ஒருபடகில் இருந்து மூன்று நபர்கள் மட்டும் இறங்கி வருவது தெளிவாகத் தெரிந்தது. பெரியவர், வீரபாண்டியன், வீர நரசிம்மன் ஆகிய மூவர்கள் அவர்கள். தென்னந்தோப்பிற்குள் மரங்கள் சற்று குறைவாக இருந்த பகுதிக்கு அவர்கள் சென்ற பொழுது அங்கே தனுக்காத்த தேவரும் மற்றவர்களும் எழுந்து நின்று பெரியவரை மரியாதையுடன் கும்பிட்டு வரவேற்றனர். அங்கு அமர்ந்த பெரியவர், "தனுக்காத்த இராமுத் தேவரே! எல்லோரும் வந்துவிட்டீர்களா? என்று வினவினார் அங்கு அமர்ந்து இருந்தவர்கள் அனைவரையும் உற்றுப்பார்த்து, சரிபார்த்துவிட்டு, "ஐயா, நாம் அழைத்து இருந்தவர்களில் உருவாட்டி அம்பலக்காரர் மட்டும் வரக்கானோம். மற்றும் கீழக்கோட்டை, கொத்தியார்கோட்டை, வட்டாணம், கோடிக்கோட்டை துடுப்பூர், பெரியகோட்டை, கண்ணங்குடி, கப்பலூர் அம்பலக்காரர்கள் வந்து இருக்கிறார்கள்." "நல்லது. இனியும் தாமதிக்காமல் பேச்சைத் தொடங்குவோம். இதுவரை உங்கள் அனைவரையும் தனுககாத்த இராமுத்தேவரும்,