பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 எஸ். எம். கமால் வீரபாண்டியத் தேவரும் பலமுறை சந்தித்து நாட்டு நடப்புகளை சொல்லி இருக்கிறார்கள். நாம் அனைவரும் குடிகளது தலைவர்கள், நாட்டாண்மைக்காரர்கள், நமது நாட்டு நலத்திலே நமக்கு மிகுதியான பொறுப்பும் கவலையும் இருக்கிறது. மன்னர் தவறு செய்தால் அவரைத் தட்டிக் கேட்க நமக்கு உரிமை இருக்கிறது. ராஜவிசுவாசம் என்பது கண்களைப் பொத்திக்கொண்டு கர்ணம் அடிப்பது அல்ல. நாட்டு நன்மைக்காக உயிரைத் திரணமாக மதித்து போராடித் தியாகியாவது, "இப்பொழுது சேதுபதி மன்னர் நமது மக்களது தியாகத்தை, சேது நாட்டின் சிறப்புக்காக அல்லாமல் மதுரை நாயக்க அரசின் வளர்ச்சிக்கும் உறுதிப்பாட்டிற்கும் வீணாக்க வந்துள்ளார். நடந்து முடிந்த எட்டையாபுரம், படையெடுப்பில் நாற்றுக்கனக்கான நமது உறவினர்கள் உயிர் இழந்தனர். அம்மைய நாயக்கனூர் போரில் ஆயிரக்கணக்கில் நமது சகோதரர்கள் தியாகி ஆயினர். இந்தப் போர்களினால் நமது மறவர் சீமையின் மறக்குடிகளுக்கு என்ன நன்மை பாலையில் பொழிந்த நிலவாக மறவர்களது தியாகம் பயனற்றதாகி வருகிறது. தொடர்ந்து இந்த மன்னர் ஆட்சி நடக்குமானால், நமது நாட்டில் காலத்தே மழை பெய்தாலும், ஏரிட, கதிர் அறுக்க மக்களே இருக்கமாட்டார்கள். இயனார் கோவில் மஞ்சுவிரட்டில் மாடு பிடிப்பதற்குக்கூட இளைஞர்கள் இருக்க மாட்டார்கள். "ஆகவே, ஆட்சி மாற்றம் செய்யவேண்டியது மிகமிக அவசியமாகிவிட்டது. அதிகாரத்தை கையில் வைத்துள்ள அரசுடன் இதனை செய்வது என்பது மிகவும் சிரமமான காரியம். நமது மக்களது இரத்தத்தை பெருமளவு சிந்தக்கூடிய உள்நாட்டுக் கழகமாகவும்கூட இந்த முயற்சி மாறிவிடும். அத்தகைய சூழ்நிலை ஏற்பமாத வகையில் மிகவும் குறைவான வன்முறையையும், ஆயுத பலத்தையும் பயன்படுத்தும் திட்டம் ஒன்று வகுத்து இருக்கிறேன். இதற்கி வெளிநாட்டுப் பரங்கிகளது ஆயுத உதவியும் பெற ஏற்பாடு செய்து வருகிறேன். நமது திட்ட இலக்காக பங்குனி மாதம் பதினைந்தாம் நாளென்று முடிவு செய்து இருக்கிறேன். அதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இடையில் உள்ளது. தனுக்காத்த இராமுத் தேவரும், வீரபாண்டிய தேவரும் உங்களை மீண்டும் இன்னும் இரண்டொரு முறைவந்து சந்திப்பார்கள். திட்டத்தின் முழு விவரத்தையும் தெரிவிப்பார்கள். இதற்கிடையே நீங்கள் அனைவரும்