பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 299 நமது முயற்சிக்கு ஆதரவாக மக்களது மனோபாவத்தை மாற்ற வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இன்னும் இளைஞர்களது ஈடுபாட்டுடன் மக்கள் பொன்னும் பொருளும் கொடுத்து உதவ வேண்டும், என்பது பணிவான வேண்டுகோள் நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்..." "அனைவரும் உதவுவோம்" என்று அம்பலக்காரர்கள் ஒருமித்த குரலில் உறுதியளித்தது பெரியவருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. "அப்புறம் என்ன சாப்பாட்டிற்கு இலை போடுங்கள்." என்று தனுக்காத்த இராமுத் தேவரிடம் பெரியவர் சொன்னார். தனுக்காத்த இராமுத் தேவரும், வீரபாண்டியத் தேவரும், வீர நரசிம்மத் தேவரும் ஆகிய மூவரும் இலைடோடுவதற்கான ஏற்பாடுகளை கவனித்தனர். அந்த நிலாச் சோறு விருந்திலே கலந்துகொள்ளாவிட்டாலும் அந்த விருந்து நடப்பதை நன்கு கவனித்தான் வானில் வலம் வந்த சந்திரன், 輯 輯。輯 輯 輕 அடுத்தநாள் வைகறைப் பொழுது. ஆங்காங்கு தோப்பிள் பல இடங்களில் படுத்து இருந்த நாட்டுத் தலைவர்களிடம் விடைபெற்ற வாறு பெரியவரும், வீரபாண்டியனும், வீரநரசிம்மனும் தோப்பிலிருந்து கடற்கரைக்கு சென்றனர். அந்த காலையிலே அங்கு நங்கடரமிடப்பட்டு அந்தப்படகு ஊஞ்சலைப் போல அலைகளில் அலைந்து அசைந்துகொண்டிருந்தது. ஆழமற்ற கடற்கரை நீரில் நங்கூரமிடப்பட்டிருந்த படகில் படுத்து இருந்த படகோட்டிகளை அழைத்தனர். அவர்கள் விழித்து எழுந்து படகைச் சற்று கரைப்பக்கம் சாய்க்கவும், மூவரும் தாவி ஏறி படகிற்குள் வந்து அமர்ந்தனர். படகில் நடுவில் அமர்ந்து இருந்த பெரியவர் "சேதுக்கரை தோப்புக்கு" என்று குரல் கொடுத்ததும் கக்கானைப் பிடித்திருந்த