பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 எஸ். எம். கமால் படகோட்டி, கக்கானை மெதுவாகத் திருப்பி அதில் பிணைத்து இருந்த கயிற்றை இழுக்கவும் படகின் பாயில் சோழகன் காற்று பட்டது. படகு தெற்கு வடக்காகத் திரும்பியது. அவ்வளவுதான் நொடிப்பொழுதில் தெற்கு நோக்கிப்படகு விர்ரென்று பாய்ந்து சென்றது. அடுத்த விடியல் பொழுதில் கிழக்கு வானில் அங்கும் இங்குமாக இடம்பெற்று இர்ந்த பலவித மேகங்களின் பினினணியில் இந்தப் பாய்மரப் படகினை தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு வெள்ளி இறகுகளையுடைய பெரிய நாரை ஒன்று தனது கிளைக் கூட்டத்தைத் தேடி வேகமாக செல்வதுபோல தோற்றமளித்தது. அந்தப்படகு சேதுக்கரைத்தோப்பை அடைந்தபொழுது நன்கு நிலம் தெளிந்துவிட்டது. கடற்கரையும் அதை வளைத்து அணிசெய்த தென்னை மரங்களும் தெளிவாகக் காட்சியளித்தன. கிழக்கு வானில் சூரியன் புறப்பட்டு வருவதற்கான முன் ஏற்பாடுகளை போல வெள்ளிய வெளிச்சம் செம்மேகங்களைத் துளைத்து வந்துகொண்டிருந்தது. குடிசையின் முன் கயிற்றிக் கட்டிலில் அமர்ந்து சுருட்டைப் பற்றவைத்து புகையை ரசித்துக்கொண்டிருந்த வந்தியத்தேவன், எதிரே கடற்கரையில் இருந்து வருகிற பொரியவரையும் மற்றவர்களையும் பார்த்தவுடன் திடுக்கிட்டு எழுந்தான். கருட்டைத் தரையில் அழுத்தி தீயை அணைத்துவிட்டு எழுந்து, "மகாராஜா கும்பிடுகிறேன். . ." என்று பெரியவருக்கு மரியாதை செலுத்தினான். "என்ன வந்தியத் தேவா ஏதாவது விசேசமுண்டா" என்று கேட்டவாறு அந்தக் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தார் பெரியவர். "மகாராஜா நல்ல வேலை ஒரு நொடிக்கு முன்னர் தாங்கள் இங்கே வந்து இருந்தால் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும்" என்று படபடப்புடன் சொன்னான். I. - so i சொல்வதை நிதானமாக, தைரியமாகச் சொல்"