பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 3() "உத்திரவு" "ம்... என்ன நடந்தது?" "வந்து. . . . சேதுபதி ராஜாவின் வீரர்கள் பத்துப் ! திடீரென்று வந்தார்கள். இந்த குடிசைக்குள் நுழைந்து வேறு யாராவது இருக்கிறார்களா? என்று உற்றுப்பார்த்தார்கள். பின்ன ! என்னிடம் யாராவது இங்கு வந்தார்களா என்றும் கேட்டார்கள். நான் மட்டும்தான் இருக்கிறேன். யாரையும் பார்க்கவில்லை என்றேன். அத்துடன் அவர்கள் போய்விட்டார்கள்...." "அப்படியா....இதற்குத்தான் இவ்வளவு உளறல் குளறலா" இன்னொன்றையும் சொன்னார் பெரியவர். "சென்ற சோதனைக்கு வந்த போர்வீரர்கள் வந்தியத் தேவனுக்கு நல்ல உதை கொடுத்துப் போய்விட்டார்கள்." என்று பழைய சம்பவத்தை புன்னகையுடன் சொன்ன பெரியவர் குலுங்க குலுங்க சிரித்தார். மீண்டும் அவர் சொன்னார், "வந்தியத் தேவா இதெல்லாம் சிறு விஷயம் இதற்கெல்லாம் பயப்படக்கூடாது. சிரமங்கள் வரும் பொழுது அவைகளை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் தெரிகிறதா?" "உத்தரவு மகாராஜா II "சரி, அந்தப் பயத்தையெல்லாம் விட்டுவிட்டு இப்பொழுது அலைவாய்க்கரை வாடிக்குப் போய் நல்ல பெரிய மீன் வாங்கி வந்து சமையல் செய். இன்று மத்தியானச் சாப்பாடு இங்குதான்" என்று சொல்லியவாறு சில வெள்ளி நாணயங்களை அவனது கையில் வைத்தார். "உத்தரவு" என்று சொல்லிய வந்தியத் தேவன் ஒரு சிறிய கோணிப்பையுடன் அலவாக் கரைவாடிக்குப் புறப்பட்டான். பெரியவர் அமர்ந்து இருந்த சுட்டிலில் அருகில் விர பாண்டியனும் வீரநரசிம்மனும் தரையில் அமர்ந்தனர்.