பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305 தங்கைக்கு வேதாந்த விளக்கம் வழங்குவது ஆச்சரியமாக இருக்கிறது." என்று சொல்லியவாறு ராணியாரது கட்டிலில் அமர்ந்தவர், கலா தேவியின் கைகளில் இருந்த பால் கிண்ணத்தை கவனித்தவுடன் நிலைமையைப் புரிந்துகொண்ட மன்னர். "என்ன சேது பாலைக்கூட குடிக்காவிட்டால் உடநிலை மேலும் மோசமாகவல்லவா போய்விடும்" என்று சொலலியவாறு ராணியாரது கட்டிலில் அமர்ந்து ராணியையும் கலாதேவியையும் மாறி மாறிப் பார்த்தார். "மகாராஜா எனக்குப் பசியும் இல்லை. தாகமும் இல்லை. நான் எப்படி பாலை அருந்துவது?" மிகவும் மென்மையான குரலில் மகாராணியார் சொன்னார். ஏதோ ஒரு அரங்கத்தின் கீழ்பகுதியில் இருந்து வரும் குரல்போல. இப்பொழுது தைரியமாகப் பால் குவளையை மன்னரிடம் பணிவுடன் கொடுத்தாள் கலாதேவி. அதைப் பெற்றுக்கொண்ட மன்னர், "இதோ ஒரு சிறங்கைப்பாலாவது குடியுங்கள்" என்று ராணியாரது வாயருகில் குவளையைக் கொண்டுபோய் பாலை குடிக்குமாறு வற்புறுத்தி வாய்க்குள் ஊற்றினார். ஒரளவு பால்தான் ராணியின் வாயில் இறங்கியது. இன்னொரு பகுதி கடைவாயிலிருந்து வழிந்துகொட்டியது. அதனை தனது முந்தானையில் துடைத்த கலாதேவியைக் கரிசனத்துடன் பார்த்தார் சேதுபதி மன்னர். "கலா இப்பொழுது உனக்கு திருப்திதானே. இல்லை நீ கொடுக்கும் போது மறுத்துவிட்டு . . . . இப்பொழுது குடித்துவிட்டேனே. . . " மெதுவாக புன்னகை செய்தவாறு ராணியார் கேட்டார். "எனக்கு இப்பொழுது மிகுந்த ஆறுதல் எப்படியாவது மூன்று நாட்களுக்குப் பிறகு சிறிதளவாவது பாலைக்குடித்தீர்களே! அது போதும்" கலாதேவி சொன்னார். "சரி, மூன்று நாட்களாக இரவுபகலாக இங்கேயே இருக்கிறாய். அன்னம் தண்ணிர் இல்லாமில். இப்பொழுதாவது போய் குளித்துவிட்டு பலகாரம் சாப்பிட்டு வருகிறாயா? அல்லது மகாராஜவிடம் சொல்லி உனக்கும்..." ராணியாரது பேச்சைக்கேட்டு அவளது முகத்தில் புன்னகை பூத்தது.