பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 எஸ். எம். கமால் "என்ன நீயும் மூன்று நாட்களாக சாப்பிடாமல் இருக்கிறாயா? உடனே போய் சாப்பிட்டு வா. உனக்குப் பதிலாக உனது அக்காவை நான் பார்த்துக் கொள்கிறேன்." என்று மன்னர் சொன்னபொழுது கலாதேவி நாணம் மேலிட்டு அந்த அறையைவிட்டுச் சென்றாள். "சேது இரண்டு முக்கியமான செய்திகளை உன்னிடம் தெரிவிக்கத்தான் இங்கே வந்தேன்." -- "சொல்லுங்கள் மகாராஜா" "திருப்புல்லாணி பெருமாள் கோவில் திருப்பணி முடிந்து விட்டது. இன்னும் சில நாட்களில் குடமுழுக்கு நடக்க இருக்கிறது. I r ல் 畔 ாள்ள யுமா? என்பது என கவலை.' உன்னால் கலந்துகொள்ள முடியுமா? "எல்லாம் இறைவன் செயல் நான் கலந்துகொள்ளாவிட்டால் என்ன? தங்களது மிகப்பெரிய சாதனை ஒன்று நிறைவேறுவதைக் கேட்ககே எனக்கு எவளவோ மகிழ்ச்சியாக இருக்கிறது. மகாராஜா கலந்துகொண்டாலே போதுமானது." என்று சொன்ன ராணியார், சற்று தயக்கத்துடன் தனது பேச்சைத் தொடர்ந்தார். "ஆனால் ஒரே ஒரு ஆசை மட்டும் எனக்கு உள்ளது. அதனையும் மகாராஜா நிறைவேற்ற வேண்டும்." "சொல் சேது என்ன செய்ய வேண்டும்" "சில மாதங்களாகவே பிள்ளைப் பூச்சியைப் போல எனது சிந்தனையைக் குடைந்துகொண்டிருக்கும் அந்த அந்தரங்க ஆசையைத் தங்களிடம் எப்படிச் சொல்வது என்று தயக்கம்... ஒரு வேளை மகாராஜா அதை மறுத்துவிட்டால் .... II "நிச்சயமாக மறுக்கமாட்டேன். நிறைவேற்றி வைப்பேன். தயக்கம் இல்லாமல் சொல் சேது." "இப்பொழுது மகாராஜா திருப்புல்லாணி ஆலய குடமுழுக்கு பணியில் மிகுதியாக ஈடுபட்டு இருக்கிறீகள். அதனால் பிறகு சாவதானமாகச் சொல்கிறேன். சரி... இன்னொரு விசயம் என்ன?" மகாராணி கேட்டார். "ஆம், மறந்துவிட்டேன். என் மீது கட்டாரி வீசி கொலை