பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும் (M) / செய்ய இருமுறை நடந்த முயற்சியை உன்னிடம் சொன்கோ அல்லவா? அந்த குற்றவாளி இப்பொழுது பிடிபட்டுவிட்டான். ரா. செய்த அந்தக் குற்றத்தையும் விசாரணையில் ஒப்புக்கொண்டிருக கிறான். எட்டயபுர சம்ஸ்தானத்தை சேர்ந்தவன் அவன்." "இராமநாதப்பிரபு கருணையால் இனிமேல் தங்களுக்கு அபாயம் இல்லையல்லவா?. . . . அவனை என்ன செய்தீர்கள்" ராணியாரது ஆர்வம் நிறைந்த வினா. "சிறையில் தான் இருக்கிறான். இன்னமும் தண்டவை கொடுக்கவில்லை." இவ்விதம் ராணியும் மனனரும் பேசிக்கொண்டிருந்த பொழுது கலாதேவி அறைக்குள் வந்தாள். "என்ன கலா சாப்பிட்டாயா? இவ்வளவு சிக்கிரமே வந்துவிட்டாயே?" "சாப்பிட்டுத்தான் வருகிறேன் மகாராணி" "சந்தோஷம். மகாராணி மகிழ்ச்சியைத் தெரிவித்தள். "மாலையில் வருகிறேன்" என்று கட்டிலில் இருந்து எழுந்தார் மன்னர். "அந்தக் குற்றவாளிக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறீர்கள்? மன்னித்து விடுதலை செய்துவிடுங்கள். குற்றத்தை ஒப்புக்கொண்டான் அல்லாவா?" அந்த மன்னிப்பு அவனது வாழ்நாள் முழுவதும் அவனை உறுத்திக்கொண்டிருக்கும். வேறு குற்றம் செய்வதையும் தடுத்துவிடும்." "ஆம், அப்படியே செய்கிறேன்." மன்னர் சென்றுவிட்டார். கலாதேவி கட்டிலில் ராணியின் அருகில் அமர்ந்து அவரை மிகுந்த அன்புடன் பார்த்தாள். அவளுக்கு ராணியாரது உடல் மெலிவும் கவலையை அளித்திருக்க வேண்டும். சொல்லமுடியாத வேதனையும் அவளது இதயத்தை பெரும்பாரமாக அழுத்திக் கொண்டிருப்பது போல காணப்பட்டாள்.