பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2C) எஸ். எம். கமால் அவர்களுக்குத் தலைமை தாங்கி வந்த சேதுபதி மன்னரும் அவரது வீரர்களும், பணியாளர்களும் கோயிலுக்கு வலதுபுறமாக உள்ள ஆயிரக்கால் மண்டபத்தில் தங்கி இருந்தனர். அம்மைய நாயக்கனாருக்கு அடுத்து இருந்த வெளியில் நடைபெற்ற முதல் நாள் போரில் கன்னடப் படைகளின் பெரும் பகுதி அழ்ந்துபட்டன. எஞ்சிய அணிகளும் மைசூர் நோக்கி ஒடுவதை பின் தொடர்ந்த மதுரை வீரர்கள், மாலை நேரம் ஆகி விட்டதால் தாடிக்கொம்பு கிராமத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளில் முனைந்திருந்தனர். சுமார் இருபது வீடுகளை மட்டும் கொண்ட அந்தச் சிற்றுாரில் இவ்வளவு பெரிய படை அணி எப்பொழுதும் தங்கியது இல்லை. என்றாலும் சேதுபதி மன்னருக்கு உதவியாக வந்த கன்னிவாடி பாளையக்காரர் அந்த ஊர் மக்களிடமிருந்து அனைத்து ஒத்துழைப்பையும் பெற்று, இரவு சாப்பாட்டிற்கு தக்க ஏற்பாடுகளைச் செய்திருந்தார். மேலும் இன்னொரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தார். மெதுவாக கருங்கடல் போல் காட்சி அளித்த வான மண்டலத்தில் மெதுவாகத் தலையை நீட்டியது தண்ணிலவு. பெருமாள் கோயில் வாசலில் அமைக்கப்பட்டு இருந்த சிறிய மேடை ஒன்றின் பக்க வாட்டில் தீவெட்டிகள் கொழுந்துவிட் ( எரிந்து கொண்டிருந்தன. அவைகளின் சீரான வெளிச்சத்தில் மேடையிலும் அதற்கருகிலும் அமர்ந் திருப்பவர்களைக் காணக்கூடியதாக இருந்தது. வீணை, புல்லாங்குழல், மத்தளம், சிங்கி .wகிய இசைக் கலைஞர்களும் நட்டுவனாரும் அங்கு அப|த இருந்தனர். மேடையைச் சுற்றிலும் சுமார் முன்னுறு வீரர்களும் கிராம மக்களும் நிகழ்ச்சியைக் காணக் காத்து இருந்தனர். சி.பி. |ே lதில்