பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 "மகாராணி" அடக்க முடியாத வேதனை அவளது இதய நாளத்தை கண்டியிழுத்தது. அழுகையும் உள்ளக்குமுறலுமாக இருந்து சொற்கள் பீறிட்டு வந்தன. "என்ன கலா என்ன ே நர்ந்தது உனக்கு" ராணியார் கேட்டார். "ஒன்றுமில்லை மகாராணி, தங்களைப் பார்க்கும்கொழுது..." என்று குழறிய கலாதேவியை அன்புடன் அனைத்துக்கொண்டாள் மகாராணி. 團 轟 輻 輯。圍 நீராவி மாளிகையை ஒட்டிய சவுக்கைக்கு மன்னர் சென்றபொழுது பிரதானி அங்கே காத்துக்கொண்டு இருந்தார். வழக்கமான மரியாதையை ஏற்றுக்கொண்ட மன்னர், நாட்டு நடப்புகளைப் பற்றி பிரதானியுடன் ஆலோசனை கலந்தார். அடுத்த இரண்டு கிழமைகளில் நடக்கவிருக்கும் திருப்புலிலானிப் ெ பருமாள் கோவில் குடமுழுக்கு விழா பற்றிய ஏற்பாடுகள், தேவையான பொருள்கள் சேகரிப்பு, அன்னதானம், நாங்குநேரி, திருக்கோட்டியூர், அழகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து பண்டிதர்கள், அத்யாயனப் பட்டர்கள், அரையர்கள், நம்பிகள் ஆகியோரை அழைத்து உபசரித்தல், அன்றைய தினம் பெருமாளுக்கும், தாயாருக்கும் சாத்தவேண்டிய அலங்காரம், பட்சனங்கள் தயாரிப்பு ஆகியவை பற்றி விவரமாக தகவல்களை மன்னரும் பிரதானியும் பரிமாறிக் கொண்டதை அரண்மனை ராயசமும் கார்வாரும் அந்த தகவல்களை ஏடுகளில் பதிவுசெய்துகொண்டு வந்தபின்னர், பேச்சின் முடிவில் அவைகளை மன்னருக்கு படித்துக்காட்டி ஒப்புதல் பெற்றனர். இவையனைத்தையும் பேசி முடிப்பதற்குள் மதிய சாப்பாடு நேரம் கடந்துவிட்டது. அடுத்துராயசமும் கார்வாரும் விடைபெற்று பிரதானி அலுவலகத்திற்குச் சென்றபிறகு கோடங்கி நாயக்கர் பற்றிய பேச்சினை எழுப்பினார். "நேற்று காலை அவன் சொல்லிய வாக்குமூலத்தில் இருந்து அவனது குற்ற செய்கைக்கு அவனது மான உணர்வு மட்டும்தான் காரணமென்று நினைக்கிறீர்களா? வேறுயாரும் சம்மந்தப்பட வில்லையா?" மன்னர் பிரதானியைக் கேட்டார். "அப்படித்தான் நினைக்கிறேன் மகாராஜா"