பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 3.11 சிறிது நேரத்தில் கிழக்கே இருந்து குதிரை விரர்கள் அணியொன்று கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. சில வீரர்கள் அனுமன். உருவம் பொறித்த கொடிகளுடன் வருவதில் இருந்து அது சேதுபதி மன்னரது குதிரை அணி என்பதைப் புரிந்துகொண்டக் கோட்டைக் காவலாளிகள் கோட்டைவசலின் இருமருங்கிலும் தங்களது வாளையும் வேளையும் சரியாகப் பிடித்தவாறு ஆயத்தமாக நின்றனர். மன்னரது குதிரை முதலில் கோட்டைவாசலில் நுழைந்தவுடன், அவர்கள் மன்னருக்கு மரியாதை தெருவித்தனர். மன்னரும், பிரதானியும் கோட்டை வாசலைத் தாண்டி, ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் அருகில் தமது குதிாைகளை நிறுத்திவிட்டு உள்ளே சென்று காலைபூஜையில் கலந்துகொண்ட பிறகு அரண்மனைக்குச் சென்றனர். அந்தப்புரம் மாளிகை வரை மரியாதைக்கிணங்க மன்னருடன் சென்ற பிரதானி, மன்னரைப் பணிந்து கும்பிட்டுவிட்டு அவரது இல்லத்திற்குச் சென்றார். மன்னரது வருகையை விரைவாகச் சென்று ராணியாருக்கு மகாராணியாரது அறையின் வாசலில் நின்றுகொண்டிருந்தனர் தாதிப்பெண்கள். மன்னர் வந்ததும் அவருக்கு வழிவிட்டு மரியாதைசெலுத்த வாயில் அருகே தானாதிபதி மற்றும் தாதிப்பெண்களும் காத்து இருந்தனர். ஏதோ ஒரு விதமான களையிழந்த அவலக் காட்சி போல அந்தச் சூழல் அப்பொழுஸதது மன்னரது மனத்தில் பட்டது. ராணிபடுத்து இருந்த அநதக் கட்டில் அருகே மன்னர் சென்றதும், அவரை மிகுந்த ஆவல் நிறைந்த கண்களுடன் நோக்கினார் ராணியார். அதைக் கூர்மையாக கவனித்த மன்னர், "என்ன சேது உடல் நலம் எப்படி இருக்கிறது? கடந்து நான்கு நாட்களும் நன்றாக உறங்கினாயா சாப்பிட்டாயா?" ஆதுரத்துடன் கேட்டார் மன்னர். 'உம்' என்ற ராணியாரது மெளனத்தில் திருப்தியடைந்த மன்னர் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த கலாதேவியைக் கூர்ந்து பார்த்தார்.