பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 313 எத்தனையோ போர்க்களங்களைக் கண்டவர் எதிரிகளின் எண்ணற்ற ஆயுதக் தாக்குதலை துாசுபோல நினைத்து, சண்ட மாருதம் போல சுழன்று போராடி வெற்றிகளைக் குவித்தவர். மராத்தியரது படைகள், நெல்லைச்சீமை பாளையக்கார படைகள், மைசூர் படைகள் என எதிரிகளது அச்சம் இல்லாமல் அவர்களைத் துவம்சம் செய்த வீராதி வீரர். கலக்கம், பயம், அதுவரை அவர் உணர்ந்திராத சொற்கள்! இப்பொழுது மரணம் என்ற சொல் மனைவியின் வாயில் இருந் து வந் தபொழுது கலங்கி மலைபோல நிலைதடுமாறினார். மன்னரது நிலை கண்டு வருந்திய ராணியார், அவரது என்சாண் உடலில் எஞ்சி இருந்த சக்தி அனைத்தையும் திரட்டிக்கொண்டவர்போல கவலையுடன் காணப்பட்டார். | II * = a. = மகாராஜா. . . ." அவரது வாய்க்குள் வேதனையுடன் ராணியாரது குரல் ஒலித்தது. "மகாராஜா எனக்காக எவ்வளவு வேதனைப்படுகிறீர்கள்? இன்பமாக எத்தனை ஆண்டுகளை நாம் கழித்து இருக்கிறோம். அவைகளை நினைத்து ஆறுதல் கொள்ளுங்கள். தங்களது தெய்வத்தொண்டுகளும், அறக்கொடைகளும் எனது பிரிவினால் தடைபெற்றுவிடக்கூடாது. இது எனது பணிவான வேண்டுகோள். அத்துடன்.... அத்துடன் எனது பிரிவு எந்த வகையிலும் தங்களது வாழ்க்கையைப் பாதிக்கக் கூடாது." o "சொல் சேது. இன்னும் என்ன செய்ய வேண்டும்" "மகாராஜா இன்னொரு வின்னப்பம். இதனைத் தங்களிடம் சில காலமாகச் சொல்வதற்கு பலமுறை எத்தனித்தேன். சில நாட்களுக்கு முன்னர் கூட தங்களிடம் உறுதி பெற்றேன். நினைவு இருக்கிறதா?" "ஆமாக எனது உறுதிமொழியை நிறைவேற்றி வைப்பதற்கு சித்தமாக இருக்கிறேன். இப்பொழுது சொல் சேது" II "மகாராஜா.... "சேது. சொல்" என்று ராணியின் கட்டிலில் அமர்ந்து அவரது