பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 கரங்களைத் தனது கைகளில் கைப்பற்றியவாறு கேட்டார் மன்னர். அரண்மனை வைத்தியரும் அப்பொழுது அந்த அறைக்குள் வந்து மன்னரையும் ராணியாரையும் பணிந்து கும்பிட்டார். சிரமாக நின்றனர். மீண்டும் மன்னர் கேட்டார், "சொல் சேது" மீண்டும் ராணியாரது தயக்கத்தை கவனித்து "இன்னும் ஏன் தயக்கம் சொல் ராணி." "மகாராஜா இதோ.கலாதேவி எனது உடன் பிறவா சகோதரி" |- ாம்." "ஆந்திர நாட்டில் முளைத்த ரோஜா. இன்று நமது சேது நாட்டில் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்கிறது. தங்கையொருத்தி இல்லையே என்று ஏங்கிய எனக்கு தவம் செய்யாமலேயே கிடைத்த தங்கை எனது உள்ளத்தின் உணர்வுகளை மட்டுமல்லாமல் மகாராஜாவின் எண்ணங்களையும், தேவைகளையும் கூட நன்கு அறிந்தவள்..." இவ்விதம் தன்னைப்பற்றி அந்தக் கடைசி நேரத்திலும் மிகமிக உயர்வாகப் பேசுகின்ற மகாராணியாரது மாசற்ற அன்பினை, நினத்து அகமலர்ந்து, அவளது வாயில் இருந்து வெளிப்படும் அன்பினைக் கேட்டு கலாதேவியின் உள்ளத்தில் இருந்து வேதனை பிரவாகமாக வெளி வந்தது. "ஐயோ! மகாராணி" கலாதேவி குலுங்கி குலுங்கி அழுதாள். "கலா ஏன் அழுகிறாய்? இங்கே வா." என்று ராணியார் சொன்னதும் கண்களையும் மூக்கையும் சேலை முந்தானையில் துடைத்துக் கொண்டு ராணியின் கட்டில் அருகே வந்தாள். "கலா எனக்கு சதிதியப் பிரமாணம் செய்துகொடுத்து இருக்கிறாய் அல்லவா? இப்பொழுது அதற்கான நேரம் வந்துவிட்டது..." என்ற அவளிடம் சொல்லிவிட்டு, "மகாராஜா இதோ நான் தங்களிடமிருந்து விடை பெறுவதற்கு முன்னர், தங்களது பொறுப்புள்ள மனைவி என்ற முறையில்