பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

315 எனது பிரிவிற்குப் பின்னரும் தங்களது நலன்களில் அக்கரை கொண்டவனாக எனது ஆசையை, இறுதி விருப்பத்தை தங்களிடம் சொல்லிவிடுகிறேன். தாங்கள் நிச்சயம் ஏற்று நிறைவேறுவிர்கள் என்ற உறுதியான நம்பிக்கை உண்டு. கலா இப்படி வா. நீயும் நன்றாக கேட்டுக்கொள். மகாராஜா தங்களது வலக்கரத்தை இப்படிக் கொடுங்கள்..." மகாராஜா நீட்டிய கரத்தை தனது இருகண்களிலும் வைத்து முத்தமிட்டுவிட்டு, இனிமேல் இந்தக்கணம் முதல் எனது இடத்தில் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது இந்த குலுக் கொடியை, எனது இறுதி ஆசை இது." என சொல்லியவாறு கலாதேவியின் இரு கரங்களையும் மன்னரது கரங்களுடன் இணைத்து வைத்து இருவரையும் ஒருமுறை ஆழிய அன்புடன் பார்த்தாள். பின்னர் மகிழ்ச்சியால் மூடிய ராணியாரது கண்களில் இருந்து ஒரிரண்டு கண்ணிர்த்துளிகள் மன்னரது வலக்கரத்தில விழுந்தன. மன்னருக்கும் கலாதேவிக்கும் மட்டுமல்ல அங்கு அப்பொழுது இருந்த அரண்மனை வைத்தியர், தானாதிபதி மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் ராணியாரது செய்கை வியப்பையும் வேதனையையும் நிறைத்தது. இத்தகைய எதிர்பாராத சூழலில் மன்னரது கரத்துடன் கலாதேவியின் கரங்களை இணைத்த மகாராணியாரது கரம், மெதுவாக மன்னரது கரத்தினின்றும் நழுவுவதைக் கவனித்த கலாதேவி, "மகாராணி போய்விட்டீர்களா. . . . " என்று அலறியவாறு ராணியின் மேல் சாய்ந்து அலறினாள். "ஐயோ சேது போய்விட்டாயா" மன்னரும் புலம்பினார். மகாராணியாரது மூடிய விழிகள் திறக்கவே இல்லை. அவரது இறுதி விருப்பம் நிறைவேறியதைப் பார்த்த பிறகு, மீண்டும் கண்களை ஏன் திறக்க வேண்டும்? ராணியின் அறையில் கேட்ட அலறல், புலம்பல், அழுகை ஆகியவை சில வினாடிகளில் அரண்மனை முழுவதும் எதிரொலித்தது. கோட்டைக்குள்ளும் சிறிது நேரத்தில்அனைவரது வாயிலும் "மகாராணியார் காலமாகிவிட்டார்" என்ற இரங்கள் செய்தி பரவிக் கொண்டிருந்தது.