பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துேபதி மன்னரும் ராஜநர்த்தகியும்ட 2J கோயிலுக்குள் இருந்து பெருமாள் தரிசனம் செய்துவிட்டு சேதுபதி மன்னரும், கன்னிவாடி பாளையக்காரரும் அங்கு வந்ததும் கட்டத்தில் அமைதி நிலவியது. இருவரும் மேடை அருகே இடப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்தனர். நடனமாது ஒருத்தி மேடைக்கு வந்து முதலில் மன்னருக்கும் பின்னர் சபையோருக்கும் வணக்கம் செய்து நின்றாள். மத்தளம் ஒலித்தது. அதற்கு இணையாக குழலும் வினையும் இணைந்து சுருதி சேர்த்து குழைந்தன. வாய்ப்பாட்டுக்காரர் தெலுங்கு பத்யம் ஒன்றைப் பாடத் தொடங்கினார். அவ்வளவுதான் அதுவரை கும்பிடு நிலையுல் நின்ற நடன மங்கையின் கால் சலங்கைகளும் சிங்கியும் நாதம் எழுப்ப, அவளது இரு கைகளும் முகமும் பல்வேறு அபிநயங்களைச் செய்து காட்டின. அவைகளை அபிநயங்கள் என்று சொல்வதைவிட அந்த மங்கை வாய் திறந்து பேசாது பேசினாள், என்பதே பொருத்தமாகும். அவ்வளவு அழகான நாட்டியம். கமார் இரண்டு நாழிகை நேரம் அந்த மேடையில் விரைவு கதியில் இயங்கிய அவள் கால்களும் கைகளும் தில்லானாவின் பொழுதுதான் மென்மையாகவும் கம்பீரமாகவும் கொஞ்சின. தொடர்ந்து மங்களத்துடன் நிகழ்ச்சி முடிவுற்ற பொழுது நடனமாது சபையோர் அனைவரையும் கரம் குவித்து பணிந்து வணங்கினாள். பார்வையாளர்கள் இன்னும் ஒரு நாழிகை_நேரம் நிகழ்ச்சி நீடித்திருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தவாறு கலைந்து சென்றனர். சேதுபதி மன்னரிடம் ஏதோ சொல்லிய கன்னிவாடி பாளையக் காரர் "கொண்டம நாயுடு! இங்கே வாருங்கள். முக்தாலம்மாள் நீயும் தான்" என்று இருவரையும் அழைத்தார்.