பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 அம்பாள் பிரசாதம்" என்று திருநீற்றையும் குங்குமத்தையும் அவரிடம் கொடுத்துவிட்டு, அவரது பாதங்களில் முழந்தாலிட்டு, வனங்கினாள். "இந்த அடிமையை ஆசிர்வதியுங்கள்" என்று சொன்னாள் "செளபாக்கியமாக இரு" என்று மன்னர் ஆதுரத்திடன் சொல்லியவுடன் எழுந்து நின்று மன்னரை நோக்கினார். ராணியாரைப் பிரிந்து இரண்டுமாதங்களாகியும் அவளது முகத்தில் இன்னும் ஆழமான கவலையும் வேதனையும் தோய்ந்து இருப்பதை உணர்ந்தாள். அம்பாளை தரிசித்துவிட்டு வந்த ஆத்ம திருப்தி, அப்பொழுதே மறைந்துவிட்டது. அவளது இதயத்திலும் மகாராணியைப் பற்றிய எண்ணங்கள் நிழலாடின. அவ்வளவுதான். அடுத்த கனமே கலாதேவி அழுதாள். அதுவரை எங்கோ சிந்தனையை செலுத்திய மன்னர், சுய நினைவு வந்தவராக, "கலாதேவி ஏன் அழுகிறாய் அழுகையை நிறுத்து" மன்னர் சொன்னார். கண்ணிரைத் துடைத்துக் கொண்டு, "மகாராஜா தாங்கள் இன்னும் ராணியாரது நினைவுகளை நினைந்த இதய கண்களில் கண்ணிர் கொட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். இரவும் பகலும் எண்ணாலும் மகாராணியாரைப் பற்றிய நினைவுகளை மறக்க முடியவில்லை. வழக்கமாக வெள்ளிக் கிழமை அம்பாளை தரிசித்துவிட்டு தங்களையும் மகாராணியார் தரிசித்து தங்களது ஆசிர்வாதத்தை பெறுவார்கள் அல்லவா? அதே போல் இன்று நானும் தங்களது ஆசிர்வாதத்தைப் பெற்றேன். ஆனால் மகாராஜா அவர்களுக்கு அனுப்பிரமாணம்கூட மகாராணியாரைப் போல எனது அன்பைக் காணிக்கையாக்கி ஆறுதல் சொல்ல முடியவில்லையே என்று எண்ணினேன். என்னை அறியாமல் அழுகை வந்துவிட்டது." உலவிக் கொண்டிருந்த மன்னர் அங்கு இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தார். "கலாதேவி வாழ்க்கை என்பது இல்லாததற்கு ஏங்குவதும் இழந்ததற்குக் கவலைப்படுவதும்தான். இவைகளை நன்கு அறிந்து இருந்தும் நமது உள்ளம் அதனை எளிதாக ஏற்றுக்கொள்வதில்ல.