பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

319 இருபது ஆண்டுகளுக்கும் மேலான இனிய தொடர்பை, இரண்டு மாதங்களில் மறந்துவிடுவது இயலாத காரியம். இராமநாதப்பிரபு என்று சொல்லியமன்னரது சொற்கள் பெருமூச்சுடன் வெளி வந்து நின்றன. தம்மைச் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு மன்னர் மெளனமானார். "இதே மாளிகைக்குள் நடைபெறும் ஒவ்வொரு செய்கையையும் நோக்கும் பொழுது அவை ஒவ்வொன்றும் எனக்கு மகாராணியாரது நினைவுகளை அடுக்கடுக்காக நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. அவர்களைப் போல எனது வாழ்க்கையும் விரைவில் முடிந்துவிட்டால் ஆறுதலாக இருக்கும்." என்று கலாதேவி சொன்னாள். "கலாதேவி உனது எண்ணம் தவறானது. மரணம் என்பது நம்மை வரிந்து ஏற்றுக்கொள்ளக்கூடியது. அதனை நினைத்த மாத்திரத்தில் நாம் வரிந்துக் கொள்ள முடியாது. வீணாக மனதை அலட்டிக் கொள்ளாதே... உள்ளே போய் மற்ற காரியங்களைப் பார். அப்புறம் இன்று பிற்பகலில் இராமேசுவரம் புறப்படலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன். அர்த்த ஜாமப் பூஜையில் கலந்துகொள்ள நீயும் வருகிறாயா?" "மன்னிக்க வேண்டும். மகாராஜா அவர்கள் இந்த அடிமைக்கு மகாராணியாரது இறுதி விருப்பப்படி அவர்களது அந்தஸ்தை எனக்கு அளித்து இருக்கிறீர்கள். இதுவே மிகப் பெரிய பாக்கியம். இதனை வெளிக்காட்டிக்கொள்ளும் வகையில் மகாராஜவுடன் மக்கள் மத்தியில் வருவதற்கு மனம் கூசுகிறது. அன்பின் திருவுருவாகிய மகாராணியாரது நிலையில் இந்த அடிமை இல்லை. அந்தத் தகுதி அரண்மனைக்குள்ளேயே இருக்கட்டும்." கலாதேவி உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை மன்னர் உணர்ந்தார். "சரி. உன்னிஷ்டம்" மன்னர் சொன்னார். "மகாராஜா. . . ." என்று சொல்லிய கலாதேவி மேலும் பேசமுடியாத நிலையில் மன்னரது அறையை விட்டு அந்தப்புரத்திற்கு சென்றார்.

  • * * * *