பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 வைகறை நேரம. இராமேகவரம் அரண்மனை. காலை பூஜைக்கான ஆலய மணி ஓசை ஓய்ந்து அடங்கியது. வழக்கமாக ஆலய வழிபாட்டில் தவறாது கலந்துகொள்ளும் மன்னர் இன்னும் உறக்கத்திலிருந்து எழுந்து அறையைவிட்டு வெளியே வராதது கார்வாருக்கு ஆச்சரியமாக இருந்தது. மன்னரது அறைக்கு வெளியே உள்ள பெரிய கூடத்தில் கார்வாரும் சில பணியாளர்களும் காத்து இருந்தனர். மன்னரை எதிர்பார்த்து சவுக்கையில் பிரதானி காத்து இருந்தார். சூரிய உதயமாகி இரண்டு நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது. அரண்மனைக்கு நேர் எதிரே கிழக்கு கடற்கரையில் மீனவர்கள் முதல் நாள் இரவில் கடலில் போட்டுவந்த இறுதிப் பகுதியை கரை ஏற்றுவதற்காக இருவரிசையாக நின்றுகொண்டு இருபுறமும் வலை கரைக்கு வரும்வரை பாடும் ஏலேலோ பாட்டு மெதுவாகக் காற்றில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தது. மேலும் 5PGচ நாழிகைப் பொழுது ஆயிற்று. மன்னர் ஒரு பட்டு போர்வையை மட்டும் உடம்பில் போர்த்தியவாறு சவுக்கைக்கு வந்தார். கார்வாரும் தொடர்ந்து வந்தார். சவுக்கையில் காத்து இருந்த பிரதானியும், பணியாளர்களும் சேதுபதி மன்னரைப் பணிந்து கும்பிட்டனர். தமதுகரங்களைத் துரக்கி குவித்து அவர்களது மரியாதையை ஏற்றுக் கொண்டவாறு மன்னர் வழக்கமாக அமரும் இருக்கையில் அமர்ந்தார். மன்னரது முகத்தில் இயல்பான சாந்தமும் பொலிவும் இல்லாததை பிரதானி கவனித்தார். "நேற்று அர்த்த சாமப் பூஜையில் கலந்துகொண்டு திரும்பிய பிறகு உறங்க முடியவில்லை. ஏதோ நினைவுகளில் ஒரேகுழப்பம். காலையில் விழித்தெழ இவ்வளவு நேரமாகிவிட்டது." i. i. "மகாராஜா அவர்கள் தனிமையாக வந்ததின் விளைவு இது. மகாராணியாரது இழப்பினை மறப்பதற்கு இன்னும் சிறிது காலம் பிடிக்கும். இயன்றவரை தனிமையாகப் பொழுதைக் கழிப்பதை