பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

321 தவிர்ப்பது நல்லது. இராமநாதப்பிரபுவின் கருனையினால் நாளடைவில் இயல்பு ஏற்பட்டுவிடும். "எல்லாம் அவன் செயல்", மன்னரது பேச்சில் விரக்தி வெளிப்பட்டது. அடுத்து, "ஆமாம். நேற்று மாலையில் பாம்பன் துறையில் நமது படகுகளை பாம்பன் பாரில் கடத்திவிட்ட ஆவல் நெய்னா தெரிவித்த விண்ணப்பம் பற்றிய விவரம் அறிவீர்களா?" மன்னர் கேட்டார் "மகாராஜா பாட்டனார்சடைக்கத் தேவர் பாம்பன் வந்தபொழுது முருகப் பெருமானை வணங்கச் சென்றார். அப்பொழுது கோயிலில் இருந்தவர்கள் அங்குள்ள கேணி வயிரவ திர்த்தத்தில் வழக்கத்திற்கு மாறாக மிகவும் ஆழமாக உள்ளது. என்பதை மன்னருக்குத் தெரிவித்தார்கள். பொதுவாக கடற்கரையில் மூன்று அடி ஆழத்தில் கிணறுகள் இருக்கும். அவை ஆழம் இல்லாதவை. இந்தக்கேணி புதுமையானதாக இருந்ததால் மன்னர் அந்தக் கேணியை உற்றுப் பார்த்தார். அவரது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கனமான இரு பொன் அணிகள் நழுவி கேணிக்குள் விழுந்துவிட்டது. அந்த ஊரில் முத்துக் குளிங்ததலில் வல்லவரான அம்பலம் ஆவுல் நயினாவின் பாட்டனார் அந்தக்கேணிக்குள் மூழகி மன்னரது பொன் ஆபரணங்களை எடுத்து வந்து மன்னரிடம் கொடுத்தார். அதனால் மகிழ்சி அடைந்த மன்னர் அந்த நபருக்கு அதனைப் பாரம்பரிய உரிமையாக வழங்கியதுடன், அந்தத் தொழிலுக்கு நமக்கு தண்டமு:மம் கொடுக்க வேண்டியது இல்லையென்றும் உத்தரவிட்டார். இது நமது சமஸ்தான அட்டவணையில் உள்ளது." "நமது அலுவலர்கள் அவரை ஏன் வரி கேட்டு தொந்தரவு செய்ய வேண்டும்" "யாரோ புதிதாக பணியேற்று இருப்பதாகத் தெரிகிறது. நடப்புகளை அறியாத அவரை நாம் நாளை மறுநாள் ஊர் திரும்பும் போது கண்டிப்புச் செய்து விடலாம்." -- பிரதானி விளக்கம் சொன்னவுடன் மன்னர் மீண்டும் அவரைக் கேட்டார் "சென்ற முறை இங்கிருந்தபொழுது வடக்கே மாங்காட்டுப் பகுதியில் பத்தினி கோயில் என்ற ஒரு சிறிய வழிபாட்டுத் தலம் பற்றிக் கேள்விப்பட்டோம். அதைப் பற்றி விவரங்கள்..."