பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 "விசாரித்துப் பார்த்ததில் அங்கு குடியிருப்பு எதுவும் இல்லையென்றும் அங்கு ஒரு சிறு கோவில் மட்டும் இருப்பதாக தெரிகிறது. அந்த இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண் தனது கற்பைக் காத்துக் கொள்ள அங்கு உயிரிழந்ததின் நினைவாக அந்தப் பத்தினிக்கு சம்பந்தப்பட்ட வழியினர் அமைத்த அந்த வழிபாட்டுத்தலம், சில காலங்களில் சிலர் அங்கு வழிபாடு செய்து போகின்றார்கள் என்று தெரிகிறது." "இன்று மாலையில் அந்த இடத்தைச் சென்று பார்த்துவிட்டு வரலாம். இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் நமது கற்புக் கனலி கண்ணகிக்கு பலவழிபாட்டுத் தலங்கள் பத்தினிக் கோவில் என்று உள்ளன. அவைகளுக்கும் இந்த இடத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என நினைத்தேன். சரி. எட்டையாபுரத்தில் இருந்து பதில் வந்ததா" "இதுவரை வரப் பெறவில்லை. இரண்டொரு நாளில் எதிர் பார்க்கலாம்" "உச்சிப்பொழுது கழிந்து முன்று நாழிகைக்கு பிறகு வாருங்கள். பத்தினி கோவிலுக்குப் போய் பார்த்துவிட்டு வரலாம்." "சமுகம் உத்தரவு" பிரதானி மன்னரை வணங்கிவிட்டு சவுக்கையில் அமர்ந்து இருந்தார். மன்னர் மட்டும் தனிமையில் இருந்தார். அந்தி நேரம் சேதுபதி மன்னர் போர்வீரர்கள் சகிதம் வடக்கே இருந்து அரண்மனைக்கு திரும்பினார். சவுக்கையின் முன்பாக இராமநாதபுரத்திலிருந்து வந்த போர்வீரர்கள் காத்திருந்தார்கள். மன்னரையும் பிரதானியையும் வணங்கிவிட்டு பிரதானியிடம் ஒரு ஒலைச் சுருளை கையளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட பிரதானி, மன்னருடன் சவுக்கைக்கு சென்றார். மன்னர் இருக்கையில் அமர்ந்தவுடன் இலைச் சுருளைப் படித்துப் பார்த்தார். சில வினாடிகளுக்குப் பிறகு, "மகாராஜா எட்டயபுரம் சமஸ்தான பிரதானி பதில் ஒலை அனுப்பி உள்ளார். நம்மிடம் கைதியாக உள்ள விஜய தேவ வெங்கிடப்ப கம்பனி நாயக்கர், எட்டையபுரம் மன்னரது உறவினர்.