பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 எஸ். எம். கமால் "வந்தியத்தேவா! இரவு சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்கிறாயா?" "ஆமாம் பிரபு" "நான் கடற்கரைப் பக்கம் சென்று வருகிறேன். நம்மவர்கள் வந்தால் கேணிப்பக்கம் காத்து இருக்கச் சொல்." "உத்திரவு" பெரியவர் தோப்பைக் கடந்து கடற்கரை பக்கம் சென்றார். கடற்கரை காற்றின் இசை அதிகமாக இருந்தது. வடக்கே உள்ள முந்தல் வரை கடந்து சென்று திரும்பினார். கடல் நீரில் நனைந்த அவரது கால்கள் சில்லிட்டன. உடல் முழுவதும் கடல் காற்று குளுமையைப்பூசி உள்ளத்தில் ஒரு வித நிறைவைக் கொடுத்தது. அந்தி நேர மங்கிய ஒளி, முழுவதுமாக தொடர்ந்து வந்த இருள் திரையில் மறைந்துவிட்டது. பெரியவர் தென்னந்தோப்பிற்கு திரும்பினார். குடிசைக்குச் செல்லாமல் தோப்பின் மையப்பகுதியில் இருந்த கேணிக்குச் சென்றார். அங்கே இரு உருவங்கள் நடமாடுவதைப் புரிந்துகொண்ட பெரியவர், "வீரபாண்டியனா?" என்று கேட்டார். "ஆம் ஐயா" வீரபாண்டியனது பதில் "இன்னொருவர்?... II "ஐயா நான் தனுக்காத்த இராமுத் தேவர்" "வீரசிம்மன் எங்கே..." "இனிமேல் வரலாம்."