பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 327 "சரி. அவர் வரட்டும். நீங்கள் சொல்லுங்கள்' தனுக்காத்த இராமுத் தேவர் முதலில் சொன்னார். "திட்டப்படி ஆறுமுகம் கோட்டைக்கு வடபுறம் உள்ள ஆற்றங்கரை நானல்புதரில் ஆயுதங்களை பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறோம். அந்தக்கோட்டை மீட்புக்கு தேர்வு செய்யப் பட்டவர்கள் பக்கத்து இடைக்கால் கிராமத்தில் தங்கி இருக்கின்றனர். பங்குணிப் பதினைந்தாவது நாள் காலையில் நாணல் புதருக்குள் சென்று ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கோட்டைத் தாக்குதலை மேற்கொள்வர். அன்று காலையில் நானும் அங்கு இருப்பேன்." | = II ാടു "ஐயா இராமநாதபுரம் கோட்டைக்குள் இம்பதுபேர் ஆயுதங்களுடன் தங்களது உறவினர்கள் வீட்டில் தங்கி இருக்கின்றனர். இன்றும் இம்பது பேர் நமச்சிவாய இயர் மடத்திலும், லஷ்மீபுரம் சத்திரத்திலும் தங்கி இருக்கிறார்கள். அவர்களது ஆயுதங்கள் கோட்டை வாசலுக்கு எதிரில் உள்ள கோட்டையின் கிட்டங்கி ஒன்றில் பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டு இருக்கின்றன. பதினைந்தாம் நாள் காலையில் வெளியில் இருப்பவர்கள் தாக்குதல் தொடங்கியவுடன், உள்ளிருக்கும் நம்மவர்கள் கோட்டைக் கதவுகளை உள்ளிருந்து திறந்துவிட ஏற்பாடு செய்வார்கள். வெளியில் இருந்து தாக்குபவர்களுக்கு நான் தலைமை ஏற்பேன்." வீரபாண்டியன் சொன்னது. "திருப்புல்லாணிக்கு ஆயுதங்களும் வெடிமருந்துப் பொதிகளும் இரண்டு வண்டிகளில் போய்ச் சேர்ந்துவிட்டன. அவைகள் எப்படி, எங்கே பாதுகாப்பாக வைத்து இருப்பது. தாக்குதலுக்கு தயார் செய்யப்பட்ட நூறு பேர்களும் எங்கே தங்க வைக்க ஏற்பாடு என்பதெல்லாம் வீரசிம்மன் வந்தால்தான் தெரியும். சற்று பொறுத்திருப்போம்." "ஆமாம் ஐயா" தனுக்காத்த இராமுத் தேவரது பதில் பெரியவருக்கு ஆறுதல் அளித்தது. "இறைவன் அருளால் நமது திட்டங்கள் : „Пилги. ... и на и (,