பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 எஸ். எம். கமால் நடுத்தர வயது உள்ள அந்த நட்டுவனாரும் வாலிப வனப்பின் வடிவமான அந்த நடனமங்கையும் அடக்கமாக வந்து சேதுபதி மன்னர் முன்னர் குனிந்து பணிந்து நின்றனர். மறுபடியும் கன்னிவாடி கத்ரி நாயக்கர் "நமஸ்காரம் ஆஸ்தி" என்று தெலுங்கில் சொன்னார். நடனமாது மன்னர் முன் முழந்தாள் இட்டு குனிந்து வணங்கி எழுந்து நின்றாள். அவளைப் பார்த்த நொடி நேரத்தில் அவளது பருவக்கோலம் சேதுபதி மன்னரது சிந்தனையில் ஆழமாகப் பதிந்துவிட்டது. "இவள் பெயர் முக்தாலம்மாள். இவர் இவளது தந்தை. பெயர் கொண்டம நாயுடு. சிறந்த நட்டுவனார். மிகச் சிறந்த நாட்டு வைத்தியர். இவர்களது பூர்விகம் ஆந்திர தேசம்" கன்னிவாடி பாளையக்காரரின் பேச்சை அக்கரையுடன் கேட்ட மன்னர், "இவள் நாட்டியம் குருகுல பாணியில் மிகவும் நன்றாக இருந்தது. இந்தப் பகுதியில் நாட்டியம் பயில வசதி இருக்கின்றதா" "அப்படி ஒன்றும் இல்லை. அந்த கொண்டம நாயுடுதான் முக்தாலம்மாளின் ঙ্গেওচ" "அப்படியா ஆச்சரியமாக இருக்கிறதே" மன்னரது முகத்தில் வியப்பு நிறைந்து இருந்தது. "நாயுடுகாருவே சிறந்த நட்டுவனார். அதனை விட்டு விட்டு இப்பொழுது நாட்டு வைத்தியத்தில் இறங்கி இருக்கிறார்" கன்னிவாடி பாளையக்காரர் சொல்லி முடித்ததும்,