பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 எஸ். எம். கமால் வந்துள்ளன. இன்னும் நான்கு நாட்களில் பங்குனிப் பதினைந்தாம் நாள் முற்பகல் நிகழ்ச்சியும் நிறைவேறிவிட்டால், நமக்கும் நமது நாட்டிற்கும் நல்லது. பொறுத்துப் பார்ப்போம்" என்று பெரியவர் பெருமூச்சுடன் தமது பேச்சை நிறுத்தினார். "இயா நிச்சயமாக நமக்கு வெற்றி கிட்டும். எவ்வளவு சிரமங்களை ஏற்று இரவு பகல் உறக்கம் இல்லாமல் பாடுபட்டு வந்து இருக்கின்றோம். நமது உழைப்புக்குரிய ஊதியம் நிச்சயம் கிடைக்கும்." "அப்படித்தான் நானும் எண்ணுகிறேன்." என்ற புதுக்குரல் கேட்ட பக்கம் மூவரும் உற்றுப்பார்த்து அது வீரசிம்மனுடைய குரல். புரிந்துகொண்டனர். "sᏛ ரசிம்மா! உனக்காகத்தான் காத்துக்ெ காண்டிருந்ேதன். வேலைகளை முடித்துவிட்டாய் அல்லவா." பெரியவர் கேட்டார். "ஆம் ஐயா அத்துடன் இராமநாதபுரம் கோட்டையில் இருந்து திருப்புல்லாணி கோயிலுக்கு வந்த சில சேவர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடினேன். நமக்கு வேண்டிய சில தகவல்களை அவர்களது பேச்சிலிருந்து பிடிங்கினேன்." "என்ன செய்தி" மீண்டும் பெரியவர். "அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்னர் மகாராணியார் இறந்ததில் இருந்து மன்னரது மனநிலை சரியாக இல்லையாம். அவரது நடவடிக்கைகளில் இயல்பான தெம்பும் விறுவிறுப்பும் இல்லையாம். இந்தமாதிரியான விழாக்களில் கலந்துகொள்வது கிடையாதாம். ஏற்கனவே இங்கு திருப்பணி விழா நடைபெற்ற பொழுது, புதிதாகச் செய்யப்பட்ட திருத்தேர் வேலைகள் நிறைவு பெறவில்லையாம். அதனால் இந்த வசந்த விழாவின்போது தேர்ஒட்டவிழாவையும் முதன்முறையாக சேர்த்து இருக்கிறார்களாம். "இன்னொரு முக்கியமான விசயம் மன்னர் வரும்பொழுது அவருடன் பிரதானியை சேர்த்து ஒரு சிறிய அணி வீரர்கள் மட்டும்தான் வருவார்களாம். இது நமது திட்டத்திற்கு மிகவும் பயனுள்ள தகவல் அல்லவா."