பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 329 II - == - * f s = வீரசிம்ம! உனது ஆட்களுக்கு வோ டிாது. பல்லாம் - -- - II விவரமாகச் சொல்லிவிட்டாயா? "ஆமாம் ஐயா! இப்பொழுது அவர்கள் திருப்புல்லாணிக்கு கிழக்கே இரண்டு கல் தொலைவில், இராமேசுவரம் சாலையில் ள்ள மரைக்காயர் தோப்பில் இருக்கின்றனர். தேர் ஒட்ட விழா அன்று காலையில் நான்கு கூட்டு வண்டிகளில் ஆயுதங்களை ப. மருந்தையும் ஏற்றிக்கொண்டு, கோயிலுக்கு நுழைவுவாயிலாக உள்ள வடக்கு, தெற்குப் பகுதிகளில் வண்டிகளை அவிழ்த்துப் போட்டுவிட்டு அங்கே நிலைகொண்டிருப்பார்கள். தேர் ஒட்டம் முடிந்து தேர்நிலைக்கு வந்தவுடன் நமது திட்டத்தை...." "சரி. நானும் உண்ணுடன்தான் கோயில் முகப்பு மண்டபத்தில் இருப்பேன் அல்லவா? மற்றவற்றை, அப்பொழுது அங்கு பார்த்துக் கொள்வோம்." பெரியவர் சொன்னார் "ஐயா (ربوي" "இப்பொழுது குடிசைக்குச் செல்வோம். அதற்கு முன் ஒரு செய்தி. இதோ மூன்று பணப்பைகள் இருக்கின்றன. இவற்றில் சிறியதை தனுக்காத்ததேவர், மற்ற இரண்டு பைகளையும் வீரபாண்டியனும் வீரசிம்மனும் எடுத்துக்கொள்ளுங்கள். நாளைக் காலையில் புறப்பட்டு உங்களது இடங்களுக்குச் செல்லுங்கள். பங்குனி பதினாறாம் நாள் வெற்றி வீரர்களாக இராமநாதபுரத்தில் இருப்போம்." எல்லோரும் மகிழ்ச்சியுடன் சிரித்தனர். அடுத்து அவர்கள் குடிசை நோக்கிச் சென்றனர். அங்கே அவர்களுக்கு இரவு சாப்பாடு காத்துக்கொண்டிருந்தது. శ్లో శ్రీ శ్లో