பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 331 நிலந்தெளிந்தது.ஒரு நாழிகை நேரமே ஆகி இருந்ததால், திரு அனந்தல் வழிபாட்டில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வரவு மிகவும் குறைவாகவே இருந்தது. அவர்களில் இரு பெண்கள் மட்டும் தாயார் சன்னதியை சேவித்துவிட்டு பெருமாள் சன்னதிக்குச் செல்வது தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் பூக்குடலையில் வைத்து எடுத்து வந்த மல்லிகையும் ரோஜாவும் இணைந்து தொடுக்கப்பட்ட பெரிய மாலையொன்றை கோவில் பட்டரிடம் கொடுத்து பெருமாளுக்கு சாத்துமாறு கூறினர். வழிபாடு முடிந்து துளசி தீர்த்தமும் சாதிக்கப்பட்டு, சடாரியினால் ஆசிர்வாதம் செய்யப்பட்ட பிறகு, அவர்கள் இருவரும் அந்தச் சன்னதியில் ஒரு துரண் அருகில் அமர்ந்து, பெருமாளைத் தரிசித்தவாறு நாள் முழுவதும் பாராயணம் செய்தனர். அவர்களில் ஒருவர் ஆழ்வார் பாசுரங்களை மென்மையான குரலில் பாடினார். கோயில் நடைசாத்தப்பட்டது. உச்சி கால பூசைக்கு நடை திறக்கப்பட்டு பிறகு மூடப்பட்டது. மீண்டும் சாயங்கால வழிபாட்டிற்கு திறக்கப்பட்டது. வழிபாடுகள் நடைபெற்றன. அந்தி நேரம் வந்து கொண்டிருந்ததால், கோயில் நிலை விளக்குகளில் திரிகள் சரிபார்க்கப்பட்டு எண்ணை வார்க்க ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்தன. சன்னதியில் அமர்ந்து திருப்பாகரங்களைப் பாடி பரவசப்பட்டுக் கொண்டு இருந்த பெண்மணி, இறுதியில் பெருமாள் கோவில்களில் பாடப்பெறும் பல்லாண்டைப் பாடத் தொடங்கினார். "அடியோடும் நின்னோடும் பிரிவு இன்றி α")σαδα/ούουσοδό7(β' வடிவாய் நின் வலமார்பினில் வாழியின்ற மங்கையும் பல்லாண்டு . . ." அவர்கள் பாடி முடிப்பதற்கு முன்னர், ".// வார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு படைப்போர்க்கு முழங்கும் பாஞ்ச