பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 எஸ். எம். கமால் என எஞ்சிய பாடல் தொடர்களைத் தனது இனிய குரலில் பாடி முடித்த பொழுது அந்தப் பெண்மணிகள் இருவரும் வியப்பும் மகிழ்ச்சியும் மேலிட அந்தப் இளந்ஸ்ததுறவியை உற்று நோக்கினர். "தேவி!" என்ற அவரது அழைப்பினைக் கேட்டவுடன் கலாதேவி கற்பனை உலகில் இருந்து உணர்வு பெற்றவர்போல், "சுவாமி" என்று பதில் கொடுத்தாள். அப்பொழுது கலாதேவி யுடன் இருந்த பெண் பேசிக்கொண்டு இருங்கள் அம்மா! நான் ஆண்டாள் சன்னதிக்கும், அகவத விருட்சத்தடிக்கும் சென்று வருகிறேன்" எனக் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றாள். ".... சுவாமி நான் காண்பது கனவா? அல்லது நிஜமா? என்று புரியவில்லை. இன்று இங்கு தங்களைச் சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை" கலாதேவி சொனனாள். "தேவி நானும் அப்படித்தான் இ று எனது ஜென்ம தினம், பெருமானைச் சேவித்து அவரது கருணைக்கு உரியவனாக வேண்டும் என்பதற்காக வைகறையில் இருந்து பெருமானை வழிபட்டுவிட்டு மேற்கே உள்ள அசுவத மரத்தடியில் நாள்முழுவதும் மெளனமாக இருந்துவிட்டு கோயிலைவிட்டுச் செல்லும் முன் மீண்டும் சுவாமியைத் தரிசிக்க வந்தேன் II "என்ன ஒற்றுமை நமது சந்திப்பு நிகழ்ந்துள்ள விதம் எனக்கு மிகுந்த வியப்பைத் தந்தது." கலாதேவி கூறிவிட்டு பூக்குடலையைப் பற்றி எடுத்தவாறு சன்னதியில் இருந்து சென்று கண்ணாடி மண்டபம் அருகே போய் நின்றாள். இளந்துறவியும் அவளை பின்தொடர்ந்து வந்தார். - அங்கு இருவரும் சில நொடிகள் மெளனமாக நின்றனர். துறவிதான் பேச்சைத் தொடர்ந்தார். * "தேவி, உனது தோற்றத்தில் மிகுந்த மாற்றம் ஏற்பட்டு இருப்பதைக் காண மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஏன் இப்படி துரும்பாய் தளர்ந்துவிட்டாய்? உனது வாழ்க்கையில் அப்படி என்ன விபரீதம் நடந்தது. நான் தெரிந்துகொள்ளலாமா?"