பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 335 ஒருமுறை அவர் நின்றுகொண்டிருந்த கண்ணாடி மண்டபத்தில் வேறு யாஎலரும் இருக்கிறார்களா என்று பார்வையைச் செலுத்திய கலாதேவி, "ஆம் சுவாமி, நான் சொல்வது சத்தியம். எனது இனிய கற்பனைகள், தங்களது தெய்வீகக் குரலைக் கேட்டு எழுந்த எதிர்கலக் கனவுகள், அனைத்தும் தனுக்கோடி கடற்கரையில் எழுந்து விழுந்து சிதறிய அலைகளின் நீர் தில்லைகள் போலாகிவிட்டனவே." மேலும் கலாதேவி என்ன சொல்லப் போகிறாள் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து எதுவும் கேட்காமல் மெளனமாக இருந்தார் இளந்துறவி. அவர் எதிர்பார்த்தபடி கலாதேவி சொன்னாள், "இப்பொழுது நான் சுமங்கலி. அதுவும் இந்த நாட்டு மன்னரது பட்டமகிஷி . . . . இது தங்களுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவே தோன்றும் மகாராணியார் இறக்கும் தறுவாயில் அவரது இறுதி விருப்பம் ஒன்றை நிறைவேற்றிவைக்க முடியுமா என என்னிடமும் மகாராஜா அவர்களிடமும் கேட்டு சத்தியம் பெற்ற பிறகு எங்கள் இருவரது கரங்களையும் இணைத்து வைத்துவிட்டு கண்களை மூடிவிட்டார்." இளந்துறவியின் கண்கள் பதட்டத்தையும் ஏமாற்றத்தையும் பிரதிபலித்தன. ஆனால் அவரால் எதுவும் சொல்ல முடியாமல் திகைப்புடன் நின்றார். அவரது வாழ்க்கையில் பிடிபாடாக இருந்த இரு இலக்குகளில் ஒன்று கலாதேவியுடனான எதிர்கால வாழ்க்கை. அது இப்பொழுது எட்டாத கனியென ஆகிவிட்டது. அடுத்து அவரது வீரசபதமும் குறிப்பிடப்பட்ட நாளை மறுநாளில் நிறைவேறிவிடுமா.... அதன் முடிவும் இப்படித்தான் எதிர்பாராத நிகழ்வாக அமைந்துவிடுமா? நம்பிக்கையற்ற நிலை. அவரது மனத்தில் பெரும் போராட்டம். கலாதேவியும் பொறுக்க முடியாத வேதனையினால் மெளனமாக நின்றாள்.