பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 ΩΤΟΠΟ. @ΤΊΠ. ΦΕ Ι.ΠΠΙΦΝ) அப்பொழுது ஆண்டாள் சன்னதிக்குச் சென்று வழிபாட்டை முடித்துவிட்டு திரும்பிய கலாதேவியின் பணிப்பெண், "மகாராணி நேரமாகிவிட்டது..... " பணிவுடன் மென்மையாக கலாதெவியிடம் விண்ணப்பம் செய்தாள். "மகாராணி" இந்தச் சொல் இளந்துறவியின் செவிகளில் நாராசமாக ஒலித்தது. அத்துடன் இன்னொரு செய்தியையும் அந்த சொல் இளந்துறவிக்கு திடீரென நினைவூட்டியது. இப்பொழுது சேது நாட்டின் அரசியாக, சேதுபதியின் வாழ்க்கைத் துணைவியாகிவிட்ட அவரது முன்னாள் கனவுக் கன்னியின் தற்பொழுதைய சுமங்கலி வாழ்வும் நிலைகுலைய வைக்கும் நாளாகவல்லவா நாளை மறுநாள் நிகழ்ச்சியை அவர் மேற்கொள்ள ருக்கிறார். கடந்த சில மாதங்களாக அவருடைய காலடிகளில் தனது கன்னிவாழ்வை அர்ப்பணிக்கத் , க் கொண்டிருந்த அந்தப் பேதைப் பெண்ணுக்கு அவர் செய, . கமாறு இதுதானா? சேக்சே! இது என்ன கொடுமை. அல்ல. ஒரு கன்னிப் பெண்ணின் அன்பிற்காக, கலமெல்லாம் போற்றிக் காத்துவந்த வீரசபதத்திலிருந்து பின்வாங்குவதா மறவர் சீமை மக்களுடைய பழிக்கல்லவா ஆளாகிவிட வேண்டும்! கடவுள் ஏன் இப்படி இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சோதிக்க வேண்டும் இளந்துறவியின் சிந்தனைத் தொடர் இப்படித் தான் அவரது மனதை அழுத்தி அலைக்கழித்து இருக்க வேண்டும்? "கடவுளே ஏன் இந்த சிந்தனை" தனது ஆற்றாமையை இவ்விதம் சொல்லி முடித்தார். சில நொடிகளில் ஒரு முடிவிற்கு வந்தவராக, "நேரமாகிவிட்டது. நான் புறப்படுகிறேன்." என்று சொல்லிவிட்டு ஒருமுறை கலாதேவியை ஏமாற்றத்துடன் ஏறிட்டு பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அந்த மண்டபத்தில் நிர்மாணிக்கப்பட்டு நின்றுகொண்டிருந்த சிலைகளைப் போல, கலாதேவியும் கல்லாய் சமைந்து நின்றாள்.