பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபசி மன்னரும் ரா ர்த்தகி 23 I. ஆமாம் மகாராஜா திருப்பதியில் பிறந்த எனக்கு இளமை முதல் சங்கீதத்திலும் நாட்டியத்திலும் ஈடுபாடு. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் திருப்பதியில் மிகவும் பிரபலமாக விளங்கிய நர்த்தகி எனது பெரிய தாயார். அவரிடம் சிகிச்சை பெற்றவன். அதனால்தான் முக்தால்ம்மாளுக்கு நல்லபடியாக சிகிச்சை அளிக்க முடிந்தது." "பிறகு ஏன் நாட்டியத்தைவிட்டு வைத்தியத்திற்கு வந்தீர்கள்?"சேதுபதி மன்னர் கேட்டார் புன்னகையுடன், "அது ஒரு ராமாயணம் மாகாராஜா" என்று சொல்லிய கொண்டம நாயுடுவின் பேச்சில் சற்று திணறல் காணப்பட்டது. "ஒன்றும் அவசரமில்லை" சாவதானமாக கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது உங்கள் மகளை அழைத்துக்கொண்டு செல்லுங்கள்." என்று சொல்லிய சேதுபதி மன்னர் தால் அணிந்திருந்த பொற்சங்கிலி ஒன்றை கழற்றி நடன மாதுவிற்கு அளித்தார். மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய முக்தாலம்மாள் ஏதோ கனவு உலகத்தில் இருப்பது போன்ற சிந்தனையுடன் அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டு கும்பிட்டாள். கொண்டம நாயுடுவும் அவரது மகளும் அங்கிருந்து அகன்றனர். அவர்கள் செல்வதை மன்னரும் பாளையக்காரரும் கவனித்த பொழுது, mi. II ஆ...! தாங்கியவாறு சேதுபதி மன்னர் தரையில் சாய்ந்தார். என்ற தீனக் குரலில், மிகுந்த வலியைத் தீவெட்டி வெளிச்சத்தில் மன்னரது இடது புஜத்தில் இருந்து இரத்தம் கொட்டியதைப் பார்த்த கன்னிவாடி பாளையக்காரர், "யார் அங்கே?' என்று அழைத்தார். கோபத்துடன்