பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 339 இந்தத் திருத்தலத்தை சரணாகதி தலம் எனவும் பெளராணிகர் குறிப்பிடுவார்கள். இலங்கையர் கோன் வீடணன், கடலரசன் ஆயீகிய இருவரும் திருமாலான இராமனை தரிசித்து இங்கே அடைக்கலம் பெற்றனர் அலலவா! மேலும் இந்த துணைக்கண்டம் முழுவதிலும் திவ்வியதேசம் எனப் போற்றப்படும் நூற்றியெட்டு திருப்பதிகளில் ஒன்றான இந்தத் தலத்தை திருமங்கை ஆழ்வார் சிறப்பித்து பாடியுள்ளார். மணவாள மாமுனிகளும் பெரிய நம்பியும் இந்தப் பெருமாளது திருக்கோலத்தில் பெரிதும் ஈடுபட்டவர்களாக இந்தத் தலத்திலேயே பலகாலம் தங்கிப் பணி செய்துள்ளனர். இவ்வளவு சிரும் சிறப்புமாக இந்த திருக்கோவிலினில் முதன் முதலாக தேரோட்டம் நடைபெறுவதற்கான முதல்நாள் இரவே மக்கள் திரளத் தொடங்கினர். இந்த ஊர் மிகச் சிறிய ஊராக இருப்பதால் சிலநூறு பேர்கள் கூடிவிட்டாலே பல ஆயிரம் பேர் திரண்டுவிட்டது போன்ற தோற்றம் அளிக்கக்கூடியது. இந்த ஊர் பெருமாளுக்கு ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறும் பத்துநாள் வசந்தவிழாவின் கடைசி நாளில் திருமண வைபவமும், பெருமாளும் பிராட்டியும் புதிதாக சேதுபதி மன்னரால் செய்து வழங்கியுள்ள தேரில் ஆரோகணித்து கோயிலைச்சுற்றியுள்ள நான்கு தெருக்களிலும் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் பவனியம் அங்கு நடைபெற இருந்தது. அன்று காலை வெய்யில் இதமாக இருந்ததால் மக்களின் கோவிலுக்குள் சென்று பல சன்னதிகளில் வழிபாடுகளை முடித்தும் அண் டியோர் பிணி தீர்க்கும் அசுவதமான தல வருட்ச்சத்தை தரிசித்துவிட்டும், கடைசியாக திருமண மண்டபத்தில், குழுமியிருந்தனர். நாதசுரம் ககமாக ஒலித்துக் கொண்டிருந்தது. குறித்த நேரத்தன. சேதுபதி மன்னரும் பிரதானியும் மண்டபத்தின் மே ைக்கு பக்கத்தில் அமர்ந்தனர். பெருமாளையும், பிராட்டியை மிக சிறப்பாக அலங்கரித்து மேடையில் கொண்டு வந்து வைதி சாப பக்தர்கள் பார்வையில் அவர்கள் புது மணமக்கள் அல்லா'